விரிவான பொருள்கோடலுக்கு மனித உரிமைகளை உட்படுத்த வேண்டும்!

மனித உரிமைகள் என்பது குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்படாமல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, மத, கலாசார உரிமைகள், காணிக்கான உரிமை, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான உரிமைகளையும் இணைத்து விரிவான பொருள்கோடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு JDA Perera கலைக்கூடத்தில் ‘Social Justice Commission’ அமைப்பினால் நடத்தப்பட்ட “Act Now” திட்டத்தின் இரண்டாம் கட்டமான “UNCOVER” புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் […]

திருக்கோணேஸ்வரம் ஆலய அங்கத்துவப் பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்?

திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்கள் நட்பு முறையை அறிமுகப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவத் திட்டம் பாராட்டத்தக்க ஒன்றாக இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள விண்ணப்ப முறை பக்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், நேர விரயம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகும். தற்போதைய நடைமுறையின்படி, […]

மருதனார்மடத்தில் வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயர் வீதிக்குச் சூட்டல்

யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பக்கமாக உள்ள வீதிக்கு, புகழ்பெற்ற வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்பலகை நேற்று (23) திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்தியாவில் இருந்து வருகை தந்த பிரபல வயலின் வித்துவான் டாக்டர் எல். சுப்ரமணியம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் […]

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் மலேசிய பயணி கைது

49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியேற்றிச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர், வியாழக்கிழமை (23) அன்று அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மலேசியாவில் ஓட்டுநராகப் பணிபுரியும் 42 வயதுடைய மலேசியக் குடிமகன் ஆவர். இவர் வியாழக்கிழமை (23) அதிகாலை 12.25 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ‘எயர் […]

சுற்றுச்சூழல் விதிகளை மீறிய 41 தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடல்

சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்காமல் செயற்பட்டு வந்த 41 தொழிற்சாலைகளை 2025 ஆம் ஆண்டில் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டுவான பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் அழிவடைந்த தொழிற்சாலை தொடர்பில் விளக்கமளித்த குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ச இதனையும் வெளிப்படுத்தினார். சம்பந்தப்பட்ட தொழிற்சாலை 2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார். “சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அளவுகோல்களை […]

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கிளிநொச்சி தேவாலயம் அருகில் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

கிளிநொச்சி, தர்மபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட கே.என்.57 புன்னநிரவி கிராம அலுவலர் பிரிவின் கலாரு ஹாஃப் ஏக்கர் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வசிக்கும் நபரொருவர் வழங்கிய ரகசியத் தகவலின் அடிப்படையில், கல்லாரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்று இரவு காவல்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 11:45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது, தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உரம் நிரப்பும் பை […]

கிச்சனர் பீட்சா கடையில் கட்டண முனையத்தை (POS Machine) திருடிச் சென்ற பெண்: கேமராவில் சிக்கிய காட்சி!

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள கிச்சனர் (Kitchener) நகரில், சாதாரண வாடிக்கையாளர் போல உணவகத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர், அங்கிருந்த கட்டண முனையத்தை (POS machine) நைஸாகத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேர்வே வீதியிலுள்ள (Fairway Road) ‘டொமினோஸ் பீட்சா’ (Domino’s Pizza) உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. “அவர் உணவுக் பட்டியலைப் (Menu) பார்ப்பது போல் நடித்துக்கொண்டே, ஊழியர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கவனித்தார். சரியான தருணம் பார்த்து முனையத்தைக் கவ்விக்கொண்டு […]

ஆட்கடத்தல் வழக்கில் மிசிசாகா நபர் மீது குற்றம்சாட்டு: மேலதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

கனடாவின் மிசிசாகா (Mississauga) பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர், பெண் ஒருவரை ஆட்கடத்தல் செய்து அவரது வருமானத்தைப் பறித்துக்கொண்டதுடன், அவரைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படங்களை எடுத்து இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் “ஏமாற்றுதல், வற்புறுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்” ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில், தொராண்டோ பொலிஸாரின் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு (Human Trafficking Unit) கடந்த ஜூன் மாதம் தொராண்டோ மற்றும் மிசிசாகா பகுதிகளில் தீவிர விசாரணையைத் தொடங்கியது. […]

ரோஸ்டேல் ரயில் நிலையம் அருகே இருவர் மீது தாக்குதல்: சந்தேகநபரைக் கைது செய்ய தொராண்டோ பொலிஸார் வலைவீச்சு!

கனடாவின் தொராண்டோ நகரிலுள்ள ரோஸ்டேல் சுரங்கப்பாதை ரயில் நிலையத்திற்கு (Rosedale Subway Station) அருகே திங்கள்கிழமை அதிகாலை இருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர்கள் பலத்த காயமடைந்துள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திங்கள்கிழமை அதிகாலை 2:45 மணியளவில், ரோஸ்டேல் நிலையப் பகுதியில் கத்தியுடன் நபர் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து தொராண்டோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவத்தின் பின்னணி: தீயணைப்புக் கருவி திருட்டு: சந்தேகநபர் நிலையத்தினுள் இருந்த […]