பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக ஈழத் தமிழ்ப் பெண்

பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் […]
லண்டனில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் முன்னெடுக்கப்பட்டன. நேற்று (23.07.2026) லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட […]
நீர்கொழும்பு சிறையில் குற்றம் நிகழ்ந்துள்ளதாக நீதவான் அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தின் போது குற்றம் ஒன்று இழைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் விசாரணை நடத்தி சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இச்சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் மரணத்திற்கான காரணங்கள் அறிவிக்கப்பட்ட 28 பேரில் 17 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களினாலும், 11 பேர் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பன்முகக் காயங்களினாலும் உயிரிழந்துள்ளதாக நீதவான் அறிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 05 மற்றும் 06 […]
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் தளர்வாக அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர்,குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, […]
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கடந்த 22 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (23) உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி காலை மீன்பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் கடந்த 22 ஆம் திகதி […]
2008 மட்டக்களப்பு படுகொலை வழக்கு: பிள்ளையானை ஆகஸ்ட் 4 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது காணொளி மாநாடு (Video conference) மூலமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் அன்னத்துரை தர்ஷினி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்: 2008 ஆம் ஆண்டு […]
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு (Harshana Nanayakkara) எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, சமகி ஜன பலவேகயவின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தனைத் தொடர்ந்து, நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. முன்னதாக, ஜூலை 21 அன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவிடம் […]
அர்ச்சுனாவுக்கு பிடியாணை : எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்!

நீதிமன்ற பிடியாணை மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அர்ச்சுனாவின் விவகாரம் குறித்து வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை!

வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்பட்டும். ஆனால் இங்கு அதிகமான என்புக்கூடுகளை பார்க்கும்போது எங்களுக்கு இது ஒரு குற்றம் […]
யாழ். பொது நூலகப் புனரமைப்பு, தையிட்டி காணிகள் மீட்பு மற்றும் கறுப்பு ஜூலை குறித்து அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி கருத்து!
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, யாழ். பொது நூலகம், தையிட்டி விகாரை பிரச்சினை, தொல்பொருள் மையங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துப் தெரிவித்தார். தையிட்டி விகாரை காணிப் பிரச்சினைக்கு 2 வாரங்களில் தீர்வு தையிட்டியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடமும், விகாரைக்குச் சொந்தமான காணியை விகாரதிபதியிடமும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: காணி நில அளவை மற்றும் பகிர்வு […]