ஜி.எஸ்.பி.யை மீண்டும் பெற பிரஸ்ஸல்ஸுடன் பேச வேண்டும் ; பிரான்ஸுக்குச் சென்று பயனில்லை – ரணில்

இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிரான்ஸுடன் நடத்துவதில் பயனில்லை என்றும், அது குறித்து பிரஸ்ஸல்ஸ் நகருடனேயே பேச வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் ஜி.எஸ்.பி. பிரச்சினை குறித்து பிரான்ஸுடன் பேசி பயனில்லை. அது குறித்து பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலேயே பேச […]

இலங்கையில் சிறுநீரக நோய் தாக்கம் வெகுவாக அதிகரிப்பு!

இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார். இது தவிர, இந்நாட்டில் இதுவரை கண்டறியப்படாத மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பெருமளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணியாக நீரிழிவு நோய் காணப்படுவதாகக் குறிப்பிட்ட வைத்தியர், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டிலேயே அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் கூறினார். […]

நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறார்களா? – சர்வஜன அதிகாரம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் மற்றும் நாட்டில் முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகிறார்களா என்பது குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர், சட்டத்தரணி நளின் பத்திரன டிகுற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான […]

பிலியந்தலை போதைப்பொருள் சோதனை: பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்; மற்றொருவர் தப்பியோட்டம்

பிலியந்தலை, பொகுந்தர பகுதியில் சனிக்கிழமை காலை பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது (Drug raid), பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றொருவர் தப்பியோடியுள்ளார். சனிக்கிழமை காலை வேளையில், பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகுந்தர (Bokundara), வீரசிங்க மாவத்தை (Weerasinghe Mawatha) பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு நபர்களைப் பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பொலிஸாரின் கட்டளையை மீறிச் […]

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

கிராமங்களுக்கும் விழிப்புணர்வு தேவை – சஜித்

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல் நினோ – லா நினா (El Nino – La Nina) காலநிலை குறித்து சர்வதேச நிபுணர் குழுவினருடனான விசேட அமர்வு நேற்று (18) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் […]

டெங்குக் குடம்பிகள் பெருகும் இடங்களில் முன்னிலையில் பாடசாலைகள்!

வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனைகளின் போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 250,477 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் பாடசாலை வளாகங்களிலேயே அதிகளவிலான டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, சோதனை செய்யப்பட்ட பாடசாலை வளாகங்களில் 42.5% இல் […]

சிறந்த புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலேவை விடுவித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் – பெங்கமுவே நாலக தேரர்!

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை விடுவித்து அவருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகவும், அவருக்குப் பக்கச்சார்பாகவும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக கலந்துகொள்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் […]

கவனம் திசைதிருப்பும் கொள்ளை (Distraction Theft): டொராண்டோவில் தம்பதி கைது; பொலிஸார் அவசர எச்சரிக்கை

டொராண்டோவில் வயதான பாட்டி மற்றும் அவரது பேரக்குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்பி நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ‘கவனம் திசைதிருப்பும் கொள்ளை’ (Distraction theft) முறைகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு டொராண்டோ பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மே 18 ஆம் திகதி, டொராண்டோவின் ஃபால்ஸ்டாஃப் அவென்யூ (Falstaff Avenue) மற்றும் கல்போர்ட் வீதி (Culford Road) பகுதிக்கு அருகில் வயதான பெண்மணி ஒருவர் தனது […]

பிராம்ப்டன் துப்பாக்கிச் சூடு: 17 வயது இரட்டைச் சகோதரர்களைத் தேடும் கனடா பொலிஸார்

கனடா, பிராம்ப்டன் (Brampton) பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய இரட்டைச் சகோதரர்கள் இருவர் ‘முதல்தரக் கொலை’ (First-degree murder) குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வருவதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணியளவில், ஈடன்புரூக் ஹில் டிரைவ் (Edenbrook Hill Drive) மற்றும் ஏர்ல்ஸ்பிரிட்ஜ் புலிவார்ட் (Earlsbridge Boulevard) ஆகிய பகுதிகளுக்கு […]