கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பணி ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடற்படைக்குச் சொந்தமான ‘விஜயபாகு’ கப்பல் மற்றும் ஏனைய விசேட படகுகளைப் பயன்படுத்தி நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பொத்துவில் கடற்பரப்பிற்கு அப்பால் ஆபத்தில் சிக்கியிருந்த […]

நுளம்புகள் பெருக ஏதுவான வகையில் சூழலை பராமரித்த 4,672 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த 2026 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சூழலை பராமரித்தமை தொடர்பாக நீதிமன்றங்களில் 4,672 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெங்கு நோய் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை […]

செம்மணியில் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாளான இன்று, 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்விலும் இதேபோன்று கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஒரே புதைகுழியில் இதுபோன்ற புதைப்பு இரண்டாவது முறையாக பதிவாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘மிஸ்டர் பாரத்’

டிஜிட்டல் திரை பிரபலமான நடிகர் பாரத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீட்டு திகதி குறித்த பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், ‘ஆதித்யா’ கதிர், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த […]

சட்ட போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் உறுதியை பிரதிபலிக்கும்’தி இந்தியா ஸ்டோரி’

பொலிவுட் இயக்குநர் சேட்டன் டி கே இயக்கத்தில் தயாரிப்பாளர் சாகர் பி ஷிண்டே எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து மேற்கொள்ளப்படும் விவசாயத்தாலும்… அதில் விளைவிக்கப்படும் விளைப் பொருட்களாலும்… மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து.. சட்ட போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் .. சரணடைய மறுக்கும் அவளின் உறுதித் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ‘நீ செல்’ என்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தரணியாக காஜல் அகர்வால் நடித்திருக்கும் இந்த திரைப்படம் […]

தமிழக முதல்வரின் ‘ஜன நாயகன்’ படத்தின் பாடல் வெளியீடு

தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தயாரான கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் இடம் பிடித்த ‘அடியே என் பூந்தேனே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் விஜய், பூஜா ஹெக்டே, பொபி தியோல், மமீதா பைஜு, கௌதம் […]

மாகாண சபைத்தேர்தலை வலியுறுத்தி ஆறுகட்சிகளுடன் இணைந்து செயற்பாடு; அதிகாரங்களை மீளப் பெறுவதற்கு எதிராக கூட்டுச்செயற்பாடு: தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சந்திப்பில் தீர்மானம்

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வருகின்மையை தீவிரமாக கவனத்தில் கொண்டு  பொது தளத்தில் இணைந்துள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து விசேட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன. அத்துடன், மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதற்கு எதிராக அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்தும் முகமாக விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக […]

யாழில் கடல் அட்டைப் பண்ணைகள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் – அன்னராசா குற்றச்சாட்டு!

யாழ். மாவட்டத்தில் முறையற்ற, சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை  பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து மீனவ மக்களின் அடையாளங்களை அழிக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முற்படுவதாக கடற் தொழில் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (18) வடக்கு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியியுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் […]

சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா? தற்கொலையா? ; அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவுக்கு வர முடியும் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா? தற்கொலையா என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும். தற்போதைய நிலையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் தற்போது தீவிரமான விசாரணைகள் […]

சி.டி விக்ரமரத்ன மரணத்தில் அரசாங்கம் முறையான விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் ; தேசிய பாதுகாப்புத் பிரச்சினை உள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புத் பிரச்சினை எழுந்துள்ளமை தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டினார் கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள், நான் அமைச்சராக […]