மிசிசாகாவில் கொடூர விபத்து: பாதசாரி பலி – மோதிவிட்டு தப்பியோடிய வெள்ளை நிற மெர்சிடிஸ் காரை தேடுகிறது பொலிஸ்

பீல் பிராந்தியம் (கனடா): மிசிசாகா நகரில் பாதசாரி ஒருவர் மீது மோதிவிட்டு, நிறுத்தாமல் தப்பியோடிய (Fail-to-remain) கொடூர வாகன விபத்துச் சம்பவம் குறித்து பீல் பிராந்திய பொலிஸின் பிரதான விபத்து புலனாய்வுப் பிரிவினர் (MCB) பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 05) காலை 6:00 மணியளவில், எரின் மில்ஸ் பார்க்வே (Erin Mills Parkway) மற்றும் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் (Eglinton Avenue West) சந்திப்பில் பாதசாரி ஒருவர் விபத்துக்குள்ளாகியிருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் […]

சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்க வழக்கு

சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளரை, ஆளுநரின் தனிநபர் விசாரணைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய பதவி நீக்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்காலத் தடை உத்தரவு வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. குறித்த உத்தரவானது நேற்று(06.07.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கல் தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரியும், அந்தத் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட உப தவிசாளரினால் சட்டத்தரணி கே.குருபரன் ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு […]

பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு கடவுச்சீட்டு வழங்கிய பிரதி கட்டுப்பாட்டாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்திற்கு, மற்றொரு நபரின் தனிப்பட்ட விபரங்களைச் சேர்த்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை, உரிய பரிசோதனையின்றி ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கயநாத் பிரசங்க என்பவரை, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் கைது செய்துள்ளது. போலி கடவுச்சீட்டு தயாரித்தமை தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குத் தொடர்பாக, நீதவான் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மோசடி […]

நெடுந்தீவுக்கு புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டிருப்பது போன்று 3 மாதங்களுக்குள் நிறைவேற வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவின் இருப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு மானசீகமாக உழைத்து வருகின்ற தரப்பு என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை […]

நீர்கொழும்பிலிருந்த 700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக்கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார் 5000 வரையிலான சுகப் பிரசவங்கள்!

ழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார்- 5000 சுகப் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இச் சுகப் பிரசவங்கள் பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுவதில் குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்கள் முக்கியமான மற்றும் மறுக்க முடியாத பங்காற்றுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி நேற்று (06.07.2026) தெரிவித்துள்ளார். குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பையும் , தொழில்முறைச் சேவையையும் பாராட்டிக் கௌரவிக்கும் நோக்கில் குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் நேற்றைய தினம் மேற்படி வைத்தியசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சுவிட்ஸர்லாந்தில் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர்கள் நினைவுகூரல்

கிறபுந்தென் மாநிலத்தில்1989ஆம் ஆண்டு ஜுலை 02 அன்று சூர் நகரில் நடந்த தீவைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு இலங்கைத் தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வு வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றுள்ளது. அதேவேளை, கூர் நகரசபையினால் உயிரிழந்தவர்களை நினைவேந்தும் வகையில் புதிதாக பெயரிடப்பட்ட வீதியும், நினைவுப் பலகையும் தமிழ் மொழியிலும் திறந்து வைக்கப்பட்டது. இந்த உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதல் இனவெறி நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் (சந்தேகம்) நீண்ட காலமாக இருந்து வருகிறது. இத்தாக்குதல் நடைபெற்று 37 […]

ஞாயிற்றுக்கிழமை யாழில் திறந்த கலந்துரையாடல்: வேலையற்ற பட்டதாரிகள் – அரசியல் பிரமுகர்கள்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான சரியான தகவல்கள் தரவுகள் இதுவரையில் இல்லை. நாம் வேலை […]

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள்;உயிர்ப்பலிகள் காணாமல் போன இரு T-56 துப்பாக்கிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் உள்ளக மோதல்கள் காரணமாக, இரு தரப்பிலும் மிகவும் கவலைக்கிடமான முறையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சிறைக்கைதிகள் 19 பேரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் உயிரிழந்த இருவருடன் சேர்த்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோதலில் சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலை நிர்வாகம் என்பது சாதாரணமான ஒரு நிர்வாகம் அல்ல. அவர்கள் எந்தவித ஆயுதங்களும் இன்றி, […]

ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026; போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026 (FIFA World Cup 2026) தொடரின் Round of 16 சுற்றில், போர்த்துக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி கால்இறுதிப் போட்டிக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. ஆட்டத்தின் பெரும்பகுதி ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஸ்பெயின் அணி வீரர்கள் தொடர்ந்து போர்த்துக்கல் கோல் போஸ்ட்டை நோக்கித் […]