நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள்;உயிர்ப்பலிகள் காணாமல் போன இரு T-56 துப்பாக்கிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் உள்ளக மோதல்கள் காரணமாக, இரு தரப்பிலும் மிகவும் கவலைக்கிடமான முறையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சிறைக்கைதிகள் 19 பேரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் உயிரிழந்த இருவருடன் சேர்த்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோதலில் சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை நிர்வாகம் என்பது சாதாரணமான ஒரு நிர்வாகம் அல்ல. அவர்கள் எந்தவித ஆயுதங்களும் இன்றி, வெறும் வாய்வார்த்தையினாலேயே கைதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

அதனால்தான் கைதிகள் பலரும் இவர்களை “எங்கள் அதிகாரிகள்” (அபே மஹத்துரு) என்று அழைக்கிறார்கள். ஆனால் இன்று அந்த அதிகாரிகளும் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை வீசெட பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை கைதிகள் தூக்கி சென்று மலசல கூடத்திலுள்ள கொமட்டில் முகத்தை புதைத்து பொல்லுகள் மற்றும் கைகளால் தாக்கி கால்களால் உதைத்தே கொன்றுள்ளனர்.

மேலும், உள்ளே இருக்கும் கதவின் அருகே இருந்த ஒரு சிலைச்சாலை அதிகாரியை துக்கி சென்று ஒரு அறையில் போட்டு தலையில் மிக மனிதாபிமானம் அற்ற முறையில் காலால் உதைத்தே கொலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை நீட்டும் காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டன.

உண்மையில், கைதிகள் T-56 துப்பாக்கியை ஜன்னல் வழியாக வெளியே நீட்டி பாதுகாப்புப் பிரிவினர் மீது சுட முயன்ற போதே, தடியால் அடித்து கைதிகள் தடுக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், இந்த மோதலின் இறுதியில் 7 அதிகாரிகள் மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். தற்போது வரை இரண்டு T-56 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன. இந்தச் சம்பவத்தால் சிறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியில் திகைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் உண்மைக் கதை என்னவென்றால், நேற்று முன்தினம் இந்த மோதல் ஆரம்பமானது போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பான பிரச்சினையினால்.

சிறைச்சாலையின் உட்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் “கடுல்லகம சுரேஷ்” என்ற நபர் பற்றிய தகவல்களை கைதிகள் சிலர் அதிகாரிகளுக்கு வழங்கியமையே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.

அத்துடன் சிறைச்சாலையின் உட்பகுதியில் உள்ள மருத்துவமனை உடைக்கப்பட்டு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள், பரசிட்டமோல் உட்பட பல்வேறு வகையான மருந்துகள் கைதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவோடு இரவாக விசேட அதிரடிப்படை (STF) மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

அதிகாரிகள் வெறும் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்தியதை அடுத்து, நள்ளிரவு 12:45 மணியளவில் கூரையில் இருந்த கைதிகள் அனைவரும் கீழே இறங்கி தத்தமது அறைகளுக்குச் சென்றனர்.

கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையில், கைதிகள் கீழே இறங்கியதும் அவர்களை மீண்டும் பாதுகாப்பான கூண்டுகளுக்குள் அடைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஏனெனில், ஏற்கனவே எதிர் தரப்பைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருந்த நிலையில், தாக்குதல் நடத்திய குழுவினரும் சுதந்திரமாகவே உலா வந்தனர்.

அதிகாலை 2-3 மணியளவில் பசி காரணமாக அவர்கள் கீழே வந்து, சிறைச்சாலை மைதானத்தின் ஆங்காங்கே உறங்கத் தொடங்கினர்.நேற்றுக் காலை நிலவரப்படி, நிலைமை சுமுகமாகிவிட்டதாகக் கருதிய சிறை அதிகாரிகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை வெளியே அனுப்பவும், கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்கவும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

சிறைச்சாலையில் உட்புறக் கதவு, வெளிப்புறக் கதவு என இரண்டு கதவுகள் உள்ளன. அவற்றிற்கு இடையே பாதுகாப்புக்கான விசேட பிரிவு (Special Unit) நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இரு குழுவினருக்கும் உள்ளே எரிந்து கொண்டிருந்த பகை மீண்டும் ஒரு கொடூர மோதலாக வெடித்தது. அப்போது கைதிகள் உட்புறக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மோதலில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளை அவர்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று முன்திகம் இரவே இந்தச் சம்பவத்தை முழுமையாகத் தீர்த்து, கைதிகளைக் கூண்டுகளுக்குள் அடைத்திருக்க வேண்டும்.

கைதிகளை சுதந்திரமாக இருக்க அனுமதித்ததே இந்த வன்முறை மீண்டும் வெடிப்பதற்குக் காரணம் என்பதை சிறைச்சாலை நிர்வாகம் உணர்ந்திருக்க வேண்டும்.

தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த நாட்களில் சிறை அதிகாரிகளுக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருந்ததால், பலர் விடுமுறையில் சென்றுள்ளனர்.இதனால் சிறையை நிர்வகிக்கக் குறைந்தளவிலான அதிகாரிகளே இருந்துள்ளனர்.

900 பேர் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு சிறைச்சாலையில் 2000க்கும் அதிகமானோரை அடைத்து வைத்திருந்ததே இந்த மோதல் இவ்வளவு விரைவாகப் பரவுவதற்குக் காரணமாகும்.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்