லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர் விஜய் சேதுபதியால் வெளியீடு!

‘அழகிய கண்ணே’, ‘சாமானியன்’, ‘மாண்புமிகு பறை’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் லியோ சிவகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள :டெலிவரி பாய்’ திரைப்படத்தில் லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், […]
ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் – ஆளுநர் அர்லேகர்

சென்னை: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பொதுமக்கள் தங்களது குறைகளை ஆளுநர் மாளிகையில் உள்ள லோக் பவனில் நேரடியாகத் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண முதலமைச்சரைத் தொடர்புகொண்டு பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். சாதியப் பிரிவினைகள் குறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஆளுநர், மக்கள் நலனே முக்கியம் என்பதை வலியுறுத்தினார். தவெக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே உள்ள மோதல் போக்குக்கிடையே, முதலமைச்சருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ஆளுநர் […]
‘கூத்து பட்டறை’ சௌந்தர் நடிக்கும் ‘கங்கணம்’

நடிகர் ‘கூத்து பட்டறை’ சௌந்தர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கங்கணம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கட்ட கருப்புல..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான ராஜூ முருகன் வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஏ. இசையரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ கங்கணம்’ திரைப்படத்தில் ‘கூத்து பட்டறை’ சௌந்தர், அஸ்வினி சந்திரசேகர், சரவணன், சம்பத் ராம், ப்ரானா, அர்ச்சனா மாரியப்பன், ‘விஜய் டிவி’ ராமர் ‘ராட்சசன்’ யாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. […]
தவெகவில் இணைந்தது ஏன்? – வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி

சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைந்தார். பனையூரில் நடந்த விழாவில் தவெக-வில் சேர்ந்த பிறகு அவர் அளித்த பேட்டி, அ.தி.மு.க. தலைமையின் மீதான அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியது. தலைமைப் பண்பு இல்லாமையே அ.தி.மு.க. சரிவுக்குக் காரணம் என்று கூறிய அவர், முதல்வர் விஜய்யின் தலைமையின் கீழ் ஊழலற்ற நிர்வாகம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். சிறந்த பேச்சாளரான வைகைச்செல்வன் தவெக-வில் இணைந்திருப்பது, அந்த கட்சியின் […]
செம்மணியில் தற்போது 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளியில் வந்திருக்கின்றது. 30 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் மூடி மறைத்த அந்த உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றது-ஞானமுத்து சிறிநேசன் எம்.பி கருத்து!

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுப்பூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் சிலர் செயற்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இலங்கை செய்திகள் இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி […]
ரணில்-சஜித் கைகளில் கூட்டணிக்கான இறுதி முடிவு ; நேரடி சந்திப்பை அடுத்து இருகட்சி உறுப்பினர்களும் தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் நேரடியாக சந்தித்து உரையாடியுள்ள நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையில் நேரடியான உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் இருவருமே கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென இரு கட்சிகளின் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
தவெக அரசுக்கு எதிராக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்த திமுக, அதிமுக

சென்னை: தவெக அரசின் செயல்பாடுகள், குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து தனித்தனியாகப் புகார் அளித்துள்ளன. அமைச்சரவைக் கூட்டங்களில் சம்பந்தப்படாத நபர்கள் தலையிடுவது குறித்து தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. தி.மு.க. சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாடப் போவதாகக் கூறியுள்ள நிலையில், அ.தி.மு.க. அரசைக் […]
‘அன்பே டயானா’ பட விளம்பரப் பாடல் வெளியீடு

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை ரசிகர்களிடத்தில் விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழு… பிரத்யேக பாடல் ஒன்றை உருவாக்கி, அதன் காணொளியை வெளியிட்டுள்ளது. இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன், ‘ பரிதாபங்கள் ‘ கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]
நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ

மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை. பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து எமது கட்சி முன்னோக்கிப் பயணிக்குமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி, தலதா மாளிகையில் நேற்று சனிக்கிழமை (04) மத வழிபாடுகளின் ஈடுபட்டதன் பின்னர் ஊகடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை […]
‘கிரேட் பேரியர் ரீஃப்’ பவளப்பாறை குறித்து யுனெஸ்கோ முக்கிய அறிக்கை

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்பான ‘கிரேட் பேரியர் ரீஃப்’ பவளப்பாறை வெளுப்பு போன்ற தொடர் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வரும் போதிலும், அதனை ‘ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களின்’ பட்டியலில் சேர்க்காத யுனெஸ்கோவின் வரைவு முடிவை அவுஸ்திரேலிய அரசாங்கம் வரவேற்றுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் வெப்பநிலை உயர்வு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் பலமுறை பாரிய பவளப்பாறை வெளுப்பு ஏற்பட்டுள்ளதால், இதனை ஆபத்தான பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று ஐ. நா […]