செம்மணியில் தற்போது 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளியில் வந்திருக்கின்றது. 30 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் மூடி மறைத்த அந்த உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றது-ஞானமுத்து சிறிநேசன் எம்.பி கருத்து!

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுப்பூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் சிலர் செயற்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை செய்திகள்

இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி அபேசேகர என்பவர் கடந்த காலத்திலும் கூட நேர்மையாக விசாரணைகளை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது. அதன் பின்னர் அவரை கைது செய்து உள்ளே தள்ளியிருந்தார்கள் கோத்தபாய ஆட்சிக் காலத்தில். இப்போது அவர், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

செம்மணியில் தற்போது 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளியில் வந்திருக்கின்றது. 30 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் மூடி மறைத்த அந்த உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றது. ஆகவே, இதனை வரவேற்கின்றோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உண்மையில் இந்த விடயம் நீதிமன்ற விசாரணையின் போது உண்மைகள் கட்டாயம் வெளிவரும். கடந்த காலத்தில் உண்மையில் தெரியவேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்பட்டன.

பலர் எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் உங்களுக்குத் தெரியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த வேளையில் கொலை செய்யப்பட்ட போது இங்கு இருந்த அரசாங்கம், ராஜபக்ச அரசாங்கம் இருந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவருடைய ஆட்சிக் காலத்தில் 43-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அந்த வேளையில் பிள்ளையான் அவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்பட்ட ஒருவராக இருக்கின்றார்.

எனவே, கடந்த காலத்திலும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடைய, பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய கொலை சம்பந்தமான விசாரணை நடைபெற்றது. ஆட்சி மாற்றத்தின் போது அவர் வெளியில் வந்திருக்கின்றார். மீண்டும் பல குற்ற, குற்றச்செயல்கள் அவர் தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால், அவரோடு இருந்த சகாக்கள் கூட இவர் மீது குற்றங்களைச் சுமத்துகின்ற அரசு சாட்சியங்களாகவும் மாறியிருக்கின்றார்கள்.

எனவே, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரும் பொறுப்பு என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகின்றது. இந்த குற்றப்புலனாய்வு விசாரணைகளின் போது பேசப்படுகின்றது, ஊடகங்களில் பேசப்படுகின்றது, சமூக செயல்பாட்டாளர்கள் கூட இதைச் சொல்லுகின்றார்கள்.

ஆகவே, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது பொய்யானது என்பதை நீதிமன்றங்கள் நிச்சயமாக உறுதி செய்யும். அந்த நீதிமன்றத்தின் மூலமாக எது பொய், எது போலியானது என்பது வெளிவரும். ஏனென்றால், இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி அபேசேகர என்பவர் உண்மையில் அவர், போன காலத்திலும் கூட நேர்மையாக அவர் விசாரணைகளை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது. அவரை அதன் பின்னர் கைது செய்து உள்ளே தள்ளியிருந்தார்கள் கோத்தபாய ஆட்சிக் காலத்தில்.

இப்போது அவர், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றார். இது பொய்யல்ல, போலியல்ல. ஆகவே, இந்த விடயங்கள் உண்மையாக வந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கும், நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கடந்த காலத்தில் இந்த கொலைகள், கடத்தல்கள், கப்பங்கள், பணம் பறித்தல் போன்ற செயல்பாடுகள் நடக்கும் போது யார் யார் இந்த ஆயுதங்களோடு செயல்பட்டார்கள், எங்கெங்கு முகாம் வைத்திருந்தார்கள் என்ற விடயமெல்லாம் தெரியும்.

இப்போது ரவீந்திரநாத் பேராசிரியர் அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார், கல்வியலாளர் தம்பையா அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார், இவ்வாறு சொல்லலாம், அருட்தந்தையர், குருக்கள்மார் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், எல்லோரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த காலத்துல ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அட்டகாசமாக தீவுச்சனையிலும் கூட முகாமை வைத்துக் கொண்டு செயல்பட்டவர்கள் யார் என்பது இப்போது புலன் விசாரணையின் போது வந்து கொண்டிருக்கின்றது.

எனவே, பிள்ளையான் குற்றவாளி இல்லையென்றால், நிரபராதி என்றால், நிரபராதி என்றால் அவர் தப்பித்து வரலாம், விசாரணை, விசாரணைக்கு முகம் கொடுத்து. அதேபோல சுரேஷ் சால் இருக்கின்றார். அவரும் உண்ணாவிரதம் இருக்கின்றார், வாக்குமூலம் கொடுக்காமல் உண்ணாவிரதம் இருக்கின்றார். மடிக்கணினியில் காணப்படுகின்ற அந்த பாஸ்வேர்ட் , தொலைபேசியின் பாஸ்வேர்ட் போன்றவற்றை அவர் கொடுக்கவில்லை.

ஆகவே, குற்றம் செய்யவில்லை என்றால், மடியில் கணமில்லை என்றால், கணமில்லை என்றால் வழியில் பயமில்லை. இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். ஆகவே, போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுப்பூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் அவர் செயல்படுகின்றார்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்