நடிகர் ‘கூத்து பட்டறை’ சௌந்தர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கங்கணம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கட்ட கருப்புல..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான ராஜூ முருகன் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஏ. இசையரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ கங்கணம்’ திரைப்படத்தில் ‘கூத்து பட்டறை’ சௌந்தர், அஸ்வினி சந்திரசேகர், சரவணன், சம்பத் ராம், ப்ரானா, அர்ச்சனா மாரியப்பன், ‘விஜய் டிவி’ ராமர் ‘ராட்சசன்’ யாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. ஏ. சிவ சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செல்வா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கல்யாணி இ என்டர்பிரைசஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்யாணி .கே மற்றும் சிரஞ்சன் கே ஜி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற ‘கட்ட கருப்புல கள்ள சிரிப்புல ஆள அசத்தும் ராசா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, பின்னணி பாடகி ஸ்ரீ நிஷா பாடியிருக்கிறார். காதலின் உணர்வை மெல்லிசையுடன் விவரிக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.