ஈரான் தங்களுக்கு வழங்கிய நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே பொருளாதாரத் தடைகளிலிருந்து விலக்கு – ட்ரம்ப்

ரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பிரான்சில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாடு தங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே, அதன் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இது முற்றிலும் ஈரானின் நடத்தையைப் பொறுத்தது. அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைச் சரியாகச் செய்தால் மட்டுமே, பொருளாதாரத் தடைகளில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார். அமெரிக்காவிற்கும் […]
நாட்டில் தற்போது அரச ஊழியர்கள் திருடிக் கொண்டுதானிருக்கின்றார்கள் – லால்காந்த

நாட்டில் தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை என்றாலும், அரச ஊழியர்கள் இன்னும் திருடிக்கொண்டிருக்கிறார்கள் என விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் புதிய ஊழியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரபுக்க்கள் அல்லாத சாதாரண மக்களின் ஆட்சியாக நாம் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் […]
கனடாவில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடரும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கனடிய மண்ணில் இன்று கனடியத் தமிழ்ச் சமூகம் மாணவர் சமூகம் முன்னெடுத்த இலங்கை அரசின் PTA சட்டத்திற்கும் தமிழர் மீது கட்டவிழ்க்கப்படும் இனப்படுகொலைகள், அநீதிகளிற்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் ரொரன்ரோவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்றது
Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. […]
வட மாகாணத்தில் 4000 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

வட மாகாணத்தில் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக 4000 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் தமிழ் உத்தியோகத்தர்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்திலிருந்து இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்களின் குடும்பப் பின்னணி, அவர்களின் நடத்தை மற்றும் கல்வித் தகைமைகள் குறித்தும் பலத்த கவனம் […]
ஒன்டாரியோவில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 குழந்தைகள் பலி: துயரத்தில் மூழ்கிய குடும்பத்திற்குப் குவியும் இரங்கல்கள்

தென்மேற்கு ஒன்டாரியோவில் ஐந்து சிறு குழந்தைகள் பலியாவதற்குக் காரணமான கொடூரமான கார் விபத்து நடந்த இடத்தில், பொதுமக்கள் மலர்களையும் மென்மையான பொம்மைகளையும் (Stuffed animals) வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வாட்டர்லூவிற்கு வடக்கே உள்ள மேப்லடன் டவுன்ஷிப்பில் (Mapleton Township), போர்த் லைன் (4th Line) மற்றும் வெலிங்டன் ரோடு 12 சந்திப்பில், இவர்கள் பயணித்த வேன் ஒரு எஸ்யூவி (SUV) ரக காரோடு மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ஐந்து குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]
டெங்கு வைரஸ் புதிய திரிபுடன் பரவுகிறது!

புதிய திரிபுகளுடனேயே தற்போதை டெங்கு வைரஸ் பரவுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் பரவிய டெங்கு வைரஸூடன் ஒப்பிடுகையில் தற்போதைய புதிய வைரஸில் பல மாற்றங்கள் காணப்படுவதாக அவர் பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார். இந்த புதிய மாற்றங்களைக் கொண்ட வைரஸ் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்கு தொற்றியிருக்கவில்லை என்பதால், பெருமளவிலானோருக்கு இந்த புதிய டெங்கு வைரஸ் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். […]
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை கட்டுப்பாடு யோசனையை நிராகரித்த மக்கள்

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்துவதற்கான யோசனையை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55% பேர் இந்த முன்மொழிவுக்கு எதிராகவும், 45% பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. வலதுசாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியினால், இந்த யோசனை கொண்டு வரப்பட்டது. இக்கட்சி நீண்டகாலமாக குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் ஒரு அமைப்பாகும். இந்தக் கடுமையான விவாதம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான […]
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்கிறது கனடா: கார்னி அறிவிப்பு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை கனடா வரவேற்பதாக அந்நாட்டுப் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார். அத்துடன், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியேயான பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க கனடா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்சில் நடைபெறவுள்ள ஜி7 (G7) உச்சிமாநாட்டிற்கு முன்னதாகப் பேசிய கார்னி, இந்த ஒப்பந்தமானது மத்திய கிழக்கில் பதற்றங்களைக் குறைப்பதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான படியாகும் என வர்ணித்தார். […]
வவுனியா – வைரவப்புளியங்குள தனியார் தாதியர் கல்லூரியில் பணியாற்றிய ஐவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம், 7ஆம் ஓழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் நேற்று(15.06.2026) குழப்பநிலை ஒன்று ஏற்பட்டமையால் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் தனியார் தாதியர் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக […]