சுரேஷ் சல்லேயை தினமும் சந்திக்க சட்டத்தரணிக்கு சிஐடி மறுப்பு: குடும்பத்தினருக்கு அனுமதி!

கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த போது முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை தினமும் சந்திப்பதற்கான சட்டத்தரணியின் கோரிக்கையை சிஐடி நிராகரித்துள்ளது. தடுப்புக்காவல் உத்தரவின் (Detention order) கீழ் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சல்லேயிற்கு, சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் எழுதப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் மூலம் […]
ரொறன்ரோ டென்போர்த் பகுதியில் தொடர் தாக்குதல்: நபர் மீது 12 குற்றச்சாட்டுகள் — பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள கொக்ஸ்வெல் அவென்யூ (Coxwell Avenue) மற்றும் டென்போர்த் அவென்யூ (Danforth Avenue) சந்திப்புப் பகுதியில் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், 41 வயதுடைய நபர் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் திகதி மாலை வேளையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மற்றும் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகளின் விபரங்கள் பின்வருமாறு: ஆயுதத்துடன் பொதுமக்களைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ள […]
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இது தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதுடன், இது இன்று (15) இரவு 08.30 மணி வரை செல்லுபடியாகும். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வட மாகாணம், வடமத்திய மாகாணம், திருகோணமலை மாவட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை […]
உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார். குறித்த ஓட்டுநர், கூலி அடிப்படையில் மற்றொருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தில் வயல் உழும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். வயல் உழுது முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் அதிக வேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை […]
இலங்கையைப் பாதித்துள்ள எல் நினோ காலநிலை

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும், அதனுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் இந்த ‘எல் நினோ’ நிலைமை, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும் போது மிகவும் வலுவான நிலையை அடைவதற்குக் கிட்டத்தட்ட 60%-க்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக […]
சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி படுகொலை சாட்சியாளர் மாத்திரமேயன்றி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்பில்லாதவர் – சோமரத்னவின் மனைவி

டசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு முன்னர் அனுப்பிவைத்த கடிதம் மூலம் உங்களுக்கு அறியத்தந்து சுமார் ஒரு வருடம் கடந்திருக்கிறது. எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய ஒரு சாட்சியாளர் மாத்திரமேயாவார். எனவே இதுகுறித்து உங்களது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தாருங்கள் என வலியுறுத்தி மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் […]
Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. […]
ஜூன் -19 இல் அமெரிக்காவுடன் ஈரான் சமாதான உடன்படிக்கை கைச்சாத்து!

அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படும் என சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளார். இது தமது இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு இழுபறி நிலைமைகளுக்கு மத்தியில் அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான தமது இணக்கப்பாடுகளை தற்போது வௌியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்துரைத்த டொனால்ட் ட்ரம்ப், இந்த மாபெரும் ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என அறிவித்துள்ளார். […]
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய கட்டடத்திற்கு மாற்றம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்காக அனைத்து வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நேற்று(14) திறந்து வைக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் குறைவான குறுகிய காலத்திற்குள் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட இந்த புதிய பொலிஸ் கட்டடம், மக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் தரமான பொலிஸ் சேவையை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது, பழைய பொலிஸ் கட்டடம் அமைந்திருந்த […]
பெறுபேறுகளில் தாமதம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் இன்று முடிவுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், […]