கரம் போட்டியில் சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி!

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்கு தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் பங்காற்றியுள்ளார். முன்பதாக கடந்த 18.04.2026 நடைபெற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ் […]

அபுதாபியில் கைதான பாதாள உலக் குழுவிடம் மேலதிக விசாரணை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரரான ‘மோதர […]

எந்தவொரு தனி நாடும் புதிய உலக ஒழுங்கைத் தீர்மானிக்க முடியாது: மார்க் கார்னி உரை!

அயர்லாந்து: உலகளாவிய சவால்களுக்கு எந்தவொரு தனி நாடோ அல்லது அமைப்போ முழுமையான தீர்வுகளை வழங்கிவிட முடியாது என்றும், உலகம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் (New era) நுழைந்து கொண்டிருக்கிறது என்றும் பிரதானி மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். பிரான்சில் நடைபெறவுள்ள ஜி7 (G7) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அயர்லாந்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அவரது உரையின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: வளர்ந்து வரும் புதிய சர்வதேச ஒழுங்கு (Emerging International Order) கூட்டுமுயற்சிகள்: செயற்கை […]

கனடா – அமெரிக்க எல்லையில் பெரும் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: லொறி ஓட்டுநர் கைது

போர்ட் ஹுரோன் (மிச்சிகன்): அமெரிக்காவிலிருந்து கனடா நோக்கிப் பயணித்த வணிக ரீதியிலான லொறி (Truck) ஒன்றிலிருந்து சுமார் 60 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய கொகெய்ன் (Cocaine) போதைப்பொருளை அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கனடாவைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தன் தயால் (Chandan Tayal) என்ற லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ப்ளூ வோட்டர் பாலம் (Blue Water Bridge) எல்லைச் சோதனைச் சாவடியில் இந்த […]