‘செனெஹசே கெதெல்ல’ தீ விபத்து: மேலும் 6 பேரின் பிரேத பரிசோதனை தாமதம்

அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள “மவ்பிய செவன” பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் ஆறு பேரின் பிரேத பரிசோதனைகளை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு அவர்களது உறவினர்கள் எவரும் இதுவரை வராததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்களின் வருகையை எதிர்பார்த்து, அந்த உடல்களை களுத்துறை, நாகொட கல்லேஸ்ஸ மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையின் குளிரூட்டிகளில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றுமொரு நபரின் […]
திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் (பப்பா)

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேல் மற்றும் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானச்செல்வி(யசோ) அவர்களின் அன்புக் கணவரும், அபிசன், அஜீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் குமாரவேல், சத்தியதேவி, விக்னேஸ்வரன், காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், நாகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் சித்திவிநாயகன், பத்மலோயினி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நகுலேஸ்வரி, […]
திரு இராசரட்ணம் பரமநாதன் (பரமு)

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசரட்ணம் பரமநாதன் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பத்மநாதன், விஜயநாதன்(மோகன்), பத்மராசா, பத்மலோசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும், நாதசுபைனா(சுபைனா, லண்டன்), கருணைவேல்(கருணை, சுவிஸ்), இனூறன்(கோபி, லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராஜசுதன், சுயாளினி, விஜயகுமாரி ஆகியோரின் […]
‘கனடா உதயன்’ பத்திரிகையின் 20வது சர்வதேச விருது விழா!

‘கனடா உதயன்’ பத்திரிகையின் 20வது சர்வதேச விருது விழா ஜூன் மாதம் 6 ஆம் திகதி (நேற்று) மாலை ஸ்கார்பரோவில் உள்ள The Estate Banquet and Event Centre’ மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கனடா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 6 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலை, இலக்கியம், தொழில்முனைவு மற்றும் சமூக உறவு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை அரசியல்வாதியும் சமூக […]
பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது.-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது. எத்தனை மாணவர்களைத் தமது சமூகத்துக்குச் சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதற்கு வழங்கியுள்ளோம் என்பதில்தான் ஒரு பாடசாலைக்கு உண்மையான பெருமை கிடைக்கும்’ என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு ‘பவள விழா’ நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன. விசேட இரண்டாம் அமர்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். கல்லூரியின் […]
குடும்பப் பிணக்கால் குடும்பப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி – நீர்வேலி வடக்கில் பரபரப்பு

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்குப் பகுதியில் குடும்பப் பிணக்கு காரணமாக குடும்பப் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குடும்பத்தில் ஏற்பட்ட நீண்டகால கருத்து முரண்பாடுகள் மற்றும் தகராறுகள் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த குறித்த பெண், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் இருந்த குடும்பத்தினரும் அயலவர்களும் பெண்ணின் […]
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடற்தொழிலுக்காகக் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கடற்சீற்றம் காரணமாகக் காணாமல் போயிருந்தனர். இவர்கள் சனிக்கிழமை காலை வரை வீடு திரும்பாததால், பதற்றமடைந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர் கடற்தொழிலாளர் சங்கங்கள் இணைந்து அதிகாரிகளுக்கு அவசரத் தகவலை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, கடற்தொழில் அமைச்சரின் நேரடிப் பணிப்பின் பேரில், இலங்கை கடற்படையினர் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் களமிறங்கினர். கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப் […]
பாடகரின் கைது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு இனிக்கலாம். எங்களுக்கு அது மனவேதனையே – தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன்

தோல்வியடைந்த சில அரசியல்வாதிகளுக்கு, இன்றைய அரசியல் சூழலில் ஒரு இளைஞர் பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் எமக்கு அது மகிழ்ச்சியல்ல; மனவேதனையே. இன்று கைது செய்யப்பட்ட பின்னரே அந்த இளைஞர் கலைஞரைப் பற்றி பலரும் பேசுகின்றனர். இதுவரை அவரது திறமையையும் படைப்புகளையும் கண்டுகொள்ளாதவர்கள், இன்று அவரை பற்றி கருத்து தெரிவிக்க முன்வருகின்றனர். குறைந்தபட்சம் இப்போது அவரது திறமை வெளிச்சத்திற்கு வந்திருப்பது ஒரு வகையில் ஆறுதலாக இருக்கிறது. இசை என்பது மக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் […]
வவுனியா ஓமந்தையில் கொடூரம்: ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய் மீது தாக்குதல்; மகனை கத்தியால் குத்திக்கொலை!

வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
ஜெயபுரத்தில் சோகம்: காணாமல் போன வனவள அதிகாரி அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி (Forest Officer) ஒருவர், அவர் பணிபுரிந்த அலுவலகத்திற்கு மிக அருகாமையில் உள்ள காணி ஒன்றின் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வன வள அதிகாரி திடீரெனக் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் மோப்ப நாய்களின் (Police Dogs) உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, மோப்ப நாய் காட்டிய திசையை நோக்கிச் சென்று சோதனையிட்டபோதே, அலுவலகத்திற்கு அருகிலுள்ள இந்த பாழடைந்த […]