விண்வெளித் தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: ஐவர் உடல்சிதறி உயிரிழப்பு

தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (01) ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தென் கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தத் திடீர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து அந்நாட்டு சுகாதார மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள […]

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேயை, மேலும் 90நாட்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2026 மே 27 திகதியிட்ட MOD/LEG/PTA/21/2026 என்ற தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்த ஜனாதிபதி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 9(1)-இன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் […]

10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வவுனியாவில் வர்த்தகர் தலைமறைவு!

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது. வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகரே 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பல வர்த்தகரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு […]

கிச்சனர் (Kitchener) குடியிருப்பில் ‘திட்டமிட்ட’ துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

திங்கட்கிழமை அதிகாலை கிச்சனரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் (Waterloo Regional Police) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை சுமார் 2:50 மணியளவில், சிம்ஸ் எஸ்டேட் டிரைவ் (Sims Estate Drive) மற்றும் ஃபேர்வே ரோட் நோர்த் (Fairway Road North) பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர். அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் […]

பிராம்ப்டன் (Brampton) குடியிருப்பில் குழந்தை சடலமாக மீட்பு: பெண் ஒருவர் கைது

பிராம்ப்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காலையில் அங்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பிராம்ப்டனில் உள்ள வீடு ஒன்றிற்குள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில், 20 வயதுடைய பெண் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்னடி ரோட் நோர்த் (Kennedy Road North) மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே (Williams Parkway) பகுதிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் […]

உளநல விழிப்புணர்வு!

உளநல விழிப்புணர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) பி. ப 03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பேறு கால உள நலம் தொடர்பாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உள மருத்தவ நிபுணர் திரு எஸ். சிவதாஸ் அவர்களால் விழிப்புணர்வு நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு. ந. உதயகுமா

மீகொட வாகன விபத்து வழக்கு: நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

மீகொட பகுதியில் உள்ள வெசாக் தன்சல் (தானப்பந்தல்) ஒன்றில் இடம்பெற்ற கொடிய விபத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டுநர் வரும் ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட இந்தத் துயர சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, டபுள்-கேப் (Double-Cab) ரக வாகனத்தை ஓட்டிச் சென்ற 42 வயதுடைய ஓட்டுநர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாய் லெவல் (High […]

ஜூன் 26 ஆம் திகதி ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கான, விசாரணை திகதிகளை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி அழைக்குமாறு திங்கட்கிழமை (01) கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (01) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கலகொட அத்தே ஞானசார தேரர் […]

லுனுகலையில் திடீர் தீ விபத்து: குடியிருப்புகள் தீக்கிரை

லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலண்ட்ஸ் தோட்டத்தின் சுவின்டன் பிரிவு, 24ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் (லயன் குடியிருப்பு) இன்று (01.06.2026) திங்கட்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக மூன்று குடியிருப்புகள் கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளன. இன்று காலை வீடொன்றில் திடீரெனப் பற்றி எரியத் தொடங்கிய தீ, கண் இமைக்கும் நேரத்திற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது. தீப்பரவலைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக ஒன்றிணைந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் […]

இலங்கை எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்: சுகாதார அமைச்சு

எபோலா (Ebola) வைரஸ் பரவலுடன் தொடர்புடைய எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை செய்துள்ளதாகப் பொதுச் சுகாதார நிபுணர் மருத்துவர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார். உலகளாவிய எபோலா வைரஸ் பரவல் நிலைமை குறித்து இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எபோலா வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதம் சுமார் 50 சதவீதமாகக் காணப்படுவதால், உலக சுகாதார அமைப்பும் (WHO) உலகளாவிய சுகாதார அதிகாரிகளும் இந்நோய் […]