விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு – பேருந்து சாரதி கைது!
புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர் . புத்தளத்திலிருந்து கரம்பை ஊடாகக் கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் டிப்போக்குச் சொந்தமான பேருந்தும், பெருக்குவட்டானிலிருந்து மதுரங்குளி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது . இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் […]
கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்காததால் 11 வயது தங்கை கொலை; 14 வயது அண்ணன் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, குளியலறைத் தண்ணீர் தொட்டியில் வீசிய குற்றச்சாட்டின் கீழ் 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று சனிக்கிழமை (30) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (28) மாலையில், ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமி, குளியலறைத் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சிறுமியின் […]
இன்று பல பிரதேசங்களில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 […]
நடிகர் அஜித்தின் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) நேற்று சனிக்கிழமை அதிகாலை சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் கூறப்படுகிறது. திரையுலகினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்குமாரின் தாயார் மறைந்த செய்தியை அறிந்ததும், தமிழக முதல்வர் விஜய், சென்னையில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று […]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூட பிக்குகள் – பௌத்த மக்கள் பிணைப்பை உடைக்க முடியவில்லை – அகலகட சிறிசுமன தேரர்

இலங்கையின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில், பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் இடையிலான பிணைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூட உடைப்பதற்கு முடியவில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சங்க சமூகத்தையும் மதிப்பிட்டு, பௌத்த சாசனத்தை வீழ்த்த இடமளிக்கக்கூடாது. பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அகலகட சிறிசுமன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு […]
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின் பிரகாரம், எரிபொருள் வகைகளின் விலை அதிகரிப்பு விபரங்கள் பின்வருமாறு: * ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீட்டர் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. * ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீட்டர் 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. * சூப்பர் […]
கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]
பரவி வரும் மூளைக்காய்ச்சலைத் தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டும் அறிவுறுத்தல்கள்

தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் என்டிரோவைரஸ் மூளைக்காய்ச்சல் எனப்படும் நோயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக குழந்தைகளையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் பாதிக்கிறது என்றும், கடந்த ஏப்ரல் மாதம் மாத்தறை மாவட்டம், தெனியாய பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை […]
பிரதமர் ஹரிணி பிரித்தானியாவில் தங்கியிருந்த இல்லம் குறித்தும் சர்ச்சை

இலங்கை அரசியல் களத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பிரித்தானிய விஜயங்களின் போதான பொதுப்பண பயன்பாடு விதம் பேசுபொருளாகியுள்ளது. 22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியா சென்றிருந்தார். இதன்போது, பிரதமர் ஹரிணி தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பதற்காக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தார். வழக்கமாக அரசியல்வாதிகள் அரச செலவில் நட்சத்திர விடுதிகளில் தங்குவதே நடைமுறையாக இருந்த நிலையில், பிரதமரின் இச்செயல் […]
தமிழ் இனப்படுகொலை நாட்டில் இடம்பெறவில்லை; ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொன்ற ‘பிரிகேடியர் பால்ராஜ்’ ஐ பாராளுமன்றில் நினைவுகூர விட்டிருக்கக் கூடாது!

டாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் குறித்துக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]