“வள்ளுவருக்கு மீண்டும் காவி பெயிண்டா?” – ஆளுநர் மாளிகை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை வறுத்தெடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: “ஆளுநர் மாளிகையில் தமிழர்களின் ஆகச்சிறந்த அடையாளமான திருவள்ளுவருக்கு மீண்டும் காவி வண்ணம் பூசப்பட்டதற்கு எதிராக, எப்போதும் ‘மியூட்’ (Mute) மோடில் இருக்கும் தவெக முதலமைச்சர் விஜய் ஏன் பயந்து நடுங்கி மௌனம் காக்கிறார்?” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அசுர வேகத்தில் அதிரடிக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, மாநிலத்தில் புதிய தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு மற்றும் உள்கட்சிப் பூசல்களைக் கையில் எடுத்துத் திமுக […]

சுதீப் – விக்ராந்த் இணைந்து மிரட்டும் ‘அன்டர்-18’

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்டர்- 18 ‘என பெயரிடப்பட்டு, அதற்கான தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் ‘அன்டர்- 18’ திரைப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு […]

புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி

‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்தன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆகாஷ் முரளி கதையின் நாயகனாக தோன்றுகிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தமிழக […]

‘கான் சிட்டி’ திரைப்பட ‘பிராடு பயலே..’ பாடல் வெளியீடு

நடுத்தர மக்களின் பெரும் கனவான பணத்தை மையப்படுத்தி கற்பனையுடன் தயாராகி இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிராடு பயலே..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், சாக்ஷி வைத்யா , வி டி வி கணேஷ், ராதா ரவி, அருள்தாஸ், தம்பி ராமையா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் […]

தமிழில் அறிமுகமாகும் டிஜிட்டல் தளம்- ‘கதை ஷார்ட்ஸ்’

ரீல்ஸ்கள் – மீம்ஸ்கள் என சமூக ஊடக வலைதளங்களை.. பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பாவிக்கும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை துல்லியமாக அவதானித்து… இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கக்கூடிய ‘குட்டி சீரிஸ்’ எனும் தலைப்பிலான வெர்ட்டிகல் மைக்ரோ டிராமா ஜேனரிலான படைப்புகளுக்கு என தமிழில் கதை ஷார்ட்ஸ் டிஜிட்டல் தளம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த தளத்தை பார்வையிட இந்திய மதிப்பில் 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டணத்தை செலுத்தி, நூற்றிற்கும் மேற்பட்ட […]

பல்லேகம தேரர் விவகாரம்; அஸ்டமஸ்தான குழுவின் முடிவு

மல்வத்த மகா விகாரையின் அஸ்டமஸ்தான குழு, வட மத்திய மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கரும், ருவன்வெலி சைத்யரமாதிகாரரின் பொறுப்பாளருமான வணக்கத்திற்குரிய எத்தலேவத்துனுவேவ ஞானதிலக தேரரை, அஸ்தமஸ்தானதிபதியின் கடமைகளைக் கவனிப்பதற்காக தற்காலிகமாக நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நேற்று (30) எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மல்வத்த மகா விகாரை பிரிவின் நுவரெங்குலத்தின் தலைமை சங்கநாயக்க மற்றும் அத்தமஸ்தானதிபதியான வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து, இவ்விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த […]

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் ரத்து

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட கொள்முதல் செயல்முறையை உடனடியாக ரத்து செய்யுமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாக, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் மே 29 அன்று சம்பந்தப்பட்ட ஏலதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் […]

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மாயம்

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காணாமல் போன பிள்ளைகள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காணாமல் போன பிள்ளைகளைக் கண்டறியும் நோக்கில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் போதகர் மரணம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில், மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமார தெரிவித்தார். சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில்: “குறித்த தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை விரிவுபடுத்துவதற்காக நிலத்தை வெட்டிச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் மண்ணுக்குள் புதையுண்டு ஆபத்தான நிலையிலிருந்த […]

புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் குழுத் தலைவராக பிரசாத் காரியவசம்

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜெனிவாவில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் 42ஆவது கூட்டத்தின்போதே இத்தெரிவு இடம்பெற்றது. இத்தெரிவை அடுத்து கருத்துரைத்த பிரசாத் காரியவசம், தன்னை ஏகமனதாக தெரிவுசெய்தமைக்காக குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோன்று சமகாலத்தில் மனித உரிமைகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் மற்றும் வளக் […]