உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்; தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கம்
உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை, பேஸ்லைன் வீதி, சிறிசர உயன என்ற முகவரியில் வசிக்கும் இந்த தம்பதியினர் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்கள் இதன் மூலம் கிடைத்த பணத்தை பெண் […]
ஸ்காபரோ வர்த்தக வளாகத்திற்குள் 8 வயது சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வு!

கனடாவின் ஸ்காபரோ (Scarborough) பகுதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக வளாகத்திற்குள் 8 வயது சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு (Sexual assault) உட்படுத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் குறித்து, சந்தேகநபரைத் தேடி ரொறன்ரோ பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் விபரங்களின்படி, கடந்த மே 12 ஆம் திகதி மாலை 4 மணியளவிற்குச் சற்று முன்னர், ஃபின்ச் அவென்யூ கிழக்கு (Finch Avenue East) மற்றும் மெக்கோவன் வீதி (McCowan Road) சந்திப்பில் அமைந்துள்ள […]
அநுர ஆட்சியில் வரி வசூலிப்பு ஒரு டிரில்லியன் ரூபாயை தாண்டியது?

லங்கையில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த வரி வருவாய் ஒரு டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அரச வருவாய் இலக்குகளை அடைவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முறையான வரி நிர்வாக செயல்முறைகளே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களும் இந்த சாதனை அளவிலான வருவாயை ஈட்டுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இத்தகைய அதிகளவிலான வரி வருவாய் […]
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாகப் பதிவிட்ட கியூபெக் நபர் தேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது!

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்கள் மற்றும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ், கனடாவின் கியூபெக் (Québec) மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவர் அந்நாட்டுத் தேசிய பாதுகாப்புப் பிரிவின் விசேட புலனாய்வு விசாரணைகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல் கனடிய மவுண்டெட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர். கியூபெக்கின் லேவிஸ் (Lévis) பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகமது அலி பென் சாவா (Mohamed Ali Ben Chaoua) என்ற நபரே இவ்வாறு ஆர்.சி.எம்.பி (RCMP) […]
ஹன்டா வைரஸ் தொற்றின் ஆரம்பப் புள்ளியைக் கண்டறியும் நோக்கில் விஞ்ஞானிகள்…

உலகின் மிகத் தெற்கே அமைந்துள்ள பனி படர்ந்த அர்ஜென்டினாவின் ‘உஷுவாயா’ (Ushuaia) நகரக் காடுகளில், உலக நாடுகளை அச்சுறுத்தும் ‘ஹன்டா வைரஸ்’ (Hantavirus) தொற்றின் ஆரம்பப் புள்ளியைக் கண்டறியும் நோக்கில் விஞ்ஞானிகள் தீவிர கள ஆய்வில் இறங்கியுள்ளனர். அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற ‘மல்பிரான் இன்ஸ்டிடியூட்’ (Malbrán Institute) விஞ்ஞானிகள், முகமூடி மற்றும் கையுறைகளுடன் இக்காடுகளில் 150-க்கும் மேற்பட்ட கூண்டுகளை அமைத்து எலிகளைப் பிடிக்கும் விசேட ஆபரேஷனை முன்னெடுத்துள்ளனர். சமீபத்தில் ‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் […]
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு ஆயுத பயிற்சி; பாரிய அசம்பாவிதங்களுக்கு மூல காரணமாக அமையலாம்!

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கடும்போக்காளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்படுவதாகவும் இவை எதிர்காலத்தில் பாரிய அசம்பாவிதங்களுக்கு மூல காரணமாக அமையலாம் என ஐஓடிபிபி பொலிஸ் இணையத்தளம் புலனாய்வு தகவல்களை சுட்டிக்காட்டி தகவலை வெளிப்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளம் இது தொடர்பில் தெரிவித்திருக்கும் விரிவான கருத்து: கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் வருண ஜசுந்தரவின் பணிப்புரையின் கீழ் இந்த ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் வதியும் மொஹமட் உவைஸ் என்பவரே குறித்த ஆயுதப் பயிற்சியை வழங்குவதாகவும் […]
இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது!

இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியை கையாள்வதற்கு போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு துரிதகர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சைபர் தாக்குதல்கள் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, […]
பாடசாலை மாணவர்களிடையே பரவும் மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோய் – சுகாதார நிபுணர் விளக்கம்

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோய் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். தியத்தலாவையில் 28 பேரும், வெலிமடையில் 13 பேரும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (22.05.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய கருணநாதன் இளங்குமரன், போக்குவரத்துத் துறை மிகவும் இன்றி அமையாததுடன் இங்கு நேரமுகாமைத்தவம் முக்கியமானது எனவும், போக்குவரத்தில் தடங்கல்கள் காலதாமதங்கள் ஏற்பட்டால் திட்டமிடப்பட்டவை அனைத்தும் பின்னோக்கி நகரும் எனவும், இதனால் சீரான போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி முக்கியமானது எனத் தெரிவித்தார். மேலும், […]