சிறையில் கைதியொருவர் உயிரிழப்பு; எட்டுக்கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறித்த கைதி அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கைதி, நேற்றுமுன்தினம் (21) உயிரிழந்ததாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கைதி 45 வயதுடைய ஆண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

“மேகதாது அணைக்கு எதிராக ஜூன் 2ல் மாபெரும் அறப்போர்!” – கர்நாடக அரசைக் கண்டித்து வைகோ தலைமையில் கூட்டு ஆர்ப்பாட்டம்!

சென்னை: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு மத்திய அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (மே 23) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதியின் குறுக்கே, […]

ஆனைக்கோட்டையில் உணவகமொன்றிற்குள் பூனை வளர்த்த நபர் மீது சட்டநடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு துர்நாற்றம் ஏற்படுத்தியமை, கடைக்குள் பூனை வளர்த்தமை, அழுகிய முட்டை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்தமை மற்றும் திறந்த வெளியில் சமைத்தமை போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக உணவாக […]

தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு

நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த (10.04.2026) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து   சிறப்பு விசாரணைகளுக்கு நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு வருகை தந்தனர். […]

வாகன இறக்குமதிகளை அரசாங்கம் கட்டுப்படுத்தாது; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உறுதி!

நாட்டில் வாகன இறக்குமதிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது நாட்டின் பொருளாதாரம் சுருங்குவதற்கோ (Allow economy to contract) அரசாங்கத்திற்கு எவ்வித நோக்கமும் இல்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (22) திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். அண்மையில் தனிநபர் சொகுசு வாகன இறக்குமதி மீது அறிவிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் வரி விதிப்பானது (Surcharge), நாட்டில் அதிகரித்து வரும் அமெரிக்க டொலரின் மாற்று விகித அழுத்தத்தைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக எடுக்கப்பட்ட […]

கூடுதல் வரி விதிப்பு குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை; ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் திட்டவட்ட மறுப்பு!

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது அண்மையில் விதிக்கப்பட்ட தற்காலிக கூடுதல் வரி விதிப்பு (Temporary surcharge) குறித்துத் தமக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என்றும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்குச் சற்று முன்னர் தாங்கள் அவசரமாக மதிப்புக் கடிதங்களை (LCs) திறக்கவில்லை என்றும் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto – JKCG) நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிறுவனம் இன்று (22) விடுத்துள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், தற்காலிக கூடுதல் வரியை […]

சந்திவெளியில் விபத்தாக சித்தரித்து திட்டமிட்ட முறையில் கொலை?

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகொட்டான்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை, சைக்கிளில் பயணித்த நபரொருவர் மீது கேப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனடிப்படையில் விபத்துத் தொடர்பில் பொலிஸார் நடத்திய […]

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி குறித்து மேலதிக தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தாக்குதல் நடந்த அன்று அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே அசாத் மௌலானாவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகக் கூறினார். அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, திலீப பீரிஸ் இந்த தகவலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார். குறித்த தொலைபேசி அழைப்பின் மூலம், காலிமுகத்திடல் […]

காசாவில் உணவு விநியோகம் பாதிப்பு

நிதி நெருக்கடி காரணமாக காசா பகுதியில் வழங்கி வரும் உணவு விநியோகத்தைக் வரும் மாதங்களில் குறைக்கவுள்ளதாக சர்வதேச உதவி அமைப்பான ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ தெரிவித்துள்ளது. மேலும், “காசா மக்களுக்கு நீண்ட காலத்திற்கு உணவளிக்கும் பொறுப்பை ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே சுமக்க முடியாது” என்றும் அது எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, காசாவில் பசிப் பிணியைப் போக்க இந்த அமைப்பு இதுவரை 50 கோடி டொலருக்கும் (அரை பில்லியன்) அதிகமான தொகையை […]

வங்கி அதிகாரியாக நடித்துப் பாரிய பண மோசடி; கல்கரியில் சந்தேகநபரைத் தேடுகிறது பொலிஸ்

கல்கரி நகரில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய வங்கி மோசடித் திட்டம் (Bank fraud scheme) ஒன்றுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் நபரொருவரை அடையாளங்காண்பதற்கு, கல்கரி பொலிஸ் பிரிவினர் பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர். பொலிஸ் விபரங்களின்படி, கடந்த மே 20 ஆம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்குத் தொலைபேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்படுத்தியவரின் விபரம் (Caller ID), அவர் ‘பேங்க் ஒஃப் மொன்றியால்’ (Bank of Montreal – BMO) வங்கியிலிருந்து பேசுவதாகக் காண்பித்துள்ளது. […]