பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தபத்மேயின் பணமோசடி நடவடிக்கைகளை இலங்கையில் ‘ கையாண்டகணேமுல்ல சஞ்சீவ” கொலைச் சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட்

“கணேமுல்ல சஞ்சீவ” கொலைச் சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட “கம்பஹா ஒஸ்மண்ட்” என்று அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகரவிடம் (Ousmand Gunasekera) நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” (Kehelbaddara Padme) என்பவரின் உள்நாட்டு பணமோசடி (Money laundering) நடவடிக்கைகளை அவர் கையாண்டு வந்தமை தெரியவந்துள்ளது. ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கடந்த மே 13 அன்று ஒஸ்மண்ட் குணசேகர […]
நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு..!!!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆவணி 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவிற்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது. […]
ஹோர்முஸ் நீரிணையில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கடல்சார் போக்குவரத்தை ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தின் கீழ் மேலாண்மை செய்வதற்கான புதிய கட்டமைப்பு ஒன்றை ஈரான் தயாரித்துள்ளதாகவும், இந்தத் திட்டம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஈரானின் மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய வழித்தட ஒழுங்கமைப்பின் கீழ், வணிகக் கப்பல்கள் (Commercial Ships) மற்றும் ஈரானுடன் ஒத்துழைப்புடன் செயல்படும் நாடுகளுக்கு மட்டுமே இந்த நீரிணையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த புதிய கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் பிரத்யேக சேவைகளுக்காக […]
வட மாகாணம் முழுவதும் மணல் நெருக்கடி

வட மாகாணம் முழுவதும் தொடர்ச்சியாக நிலவி வரும் மணல் பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாடற்ற மணல் விலை உயர்வு தொடர்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் வட மாகாண கிளை கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வட மாகாண ஆளுநர், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) தலைவர் மற்றும் அதிகாரிகள், மேலும் தொடர்புடைய அரச அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மீண்டும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் கலந்துரையாடல்கள் நடைபெற்றும் கூட […]
தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பான பல்துறை அவசர மாநாட்டை எதிர்வரும் புதன்கிழமை நடத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இணக்கம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர், மனோகணேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாகவும் மனோ கணேசன், பொது பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அண்மையில் […]
ஐக்கிய அரபு அமீரக நிதி முறைகேடு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் இன்று (16) தெரிவித்துள்ளதாவது, துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பு ஒன்றினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த மோசடியான மின்னஞ்சல் செய்திகள் மூலம் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களின் அடிப்படையில், […]
லொறி மோதியதில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழப்பு

பேராதனைப் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை, ரஜவத்த வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பிக்கு மீது மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பிக்கு, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் போவலவத்த பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வசித்து வந்த 83 […]
ஹண்டாவைரஸ் பரவிய சொகுசுக் கப்பலில் பயணித்த கனடியப் பிரஜைக்குத் தொற்று உறுதி!
கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘ஹண்டாவைரஸ்’ (Hantavirus) தொற்று பரவலுக்குள்ளான ‘எம்.வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சுற்றுலாச் சொகுசுக் கப்பலில் பயணித்த கனடியப் பிரஜை ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கப்பலிலிருந்து வெளியேறிய பின்னர் ‘வான்கூவர்’ (Vancouver) தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நால்வரில் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் லேசான அறிகுறிகள் (Mild symptoms) தென்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த நால்வரும் கனடாவிற்கு வந்திறங்கியது முதல் […]
வட கிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை மிரட்டி தேசிய மக்கள் சக்தி தனது கட்சி அரசியலை முன்னெடுக்கிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தென்மராட்சி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், வடகிழக்கில் ஊழல் செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கைது செய்யாமல், அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். தெற்கில் சிலரை கைது செய்தாலும், வடகிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை NPP அரசாங்கம் கைது செய்வதில்லை. அதற்குக் காரணம், வடகிழக்கில் NPP எதிர்பார்த்த மக்கள் ஆதரவு கிடைக்காத […]
நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இளைஞன் பலி

கம்பளை, தொரகல – கிதுல்பத்த பகுதியில் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 அடி ஆழமான நீர்நிலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தனது உறவினர் முறையான சகோதரர் ஒருவருடன் மிதிவண்டியில் பயணித்தபோது, அதன் பிரேக் செயலிழந்தமையினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.