சஜித்தின் கருத்துக்களால் காலி தேசிய வைத்தியசாலை தொடர்பில் சர்ச்சை

காலியில் உள்ள தேசிய வைத்தியசாலையில் ஸ்டென்ட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியதாக வெளியான ஊடக அறிக்கைகளை குறித்த வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது. (ஸ்டென்ட் என்பது, இதய இரத்த நாள அடைப்பைச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சிறிய குழாய் ஆகும்.) இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த காலி தேசிய வைத்தியசாலை, இதய நோயாளிகளுக்கான ஸ்டென்டிங் மற்றும் ஏஞ்சியோகிராம் பணிகள் வழக்கம் போல் தொடர்வதாகவும், போதுமான அளவு ப்ரீ-டைலேடேஷன் மற்றும் போஸ்ட்-டைலேடேஷன் பலூன்கள் கையிருப்பில் […]

மே தின மேடையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து; மக்கள் கூட்டு எதிர்க்கட்சியிடமிருந்து பிரதம நீதியரசருக்கு மகஜர்

மே தின மேடையில் நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரி, மக்கள் கூட்டு எதிர்க்கட்சி பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அதன் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அது குறித்த விபரங்களை அந்த நீதிபதி மட்டுமே அறிவார் எனவும், அதனை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த […]

மண்டூர் – வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, […]

இலங்கையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்!

இலங்கையில் மோசடி, ஊழல் மற்றும் வீணடிப்பு என்பவற்றை வேரோடு பிடுங்கி எறியும் நோக்குடன் உருவாக்கப்பட்ட லஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை எக்காரணம் கொண்டுக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என தினன தகுண கூட்டிணைவு தெரிவித்துள்ளது. தினன தகுண கூட்டிணைவின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, நதீஷ டி சில்வா மற்றும் ஊடகப் பேச்சாளர் துஷார வீரரத்ன ஆகியோர் நேற்று ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள […]

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஜனாதிபதிக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மைக்கு ஜனாதிபதியினால் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டு ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 24 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ம் திகதி ஜனாதிபதியினால் பகிரங்கமாக கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற […]

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்தவை ஆணைக்குழுவுக்கு அழைத்தது தவறு!

மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் உள்ளங்களை கொள்ளையடித்தாரே தவிர திறைசேரியை கொள்ளையடிக்கவில்லை. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு அழைத்தமை முற்றிலும் தவறானது. தேசியத்துக்காக குரல் கொடுக்கும் மக்கள் இதற்கு வெகுவிரைவில் பதிலளிப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையாகியிருந்த நிலையில் அவருக்கு ஆதரவளிக்கும் […]

கியூபா அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது

கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எவரும் கியூபா குறித்து என்னிடம் பேசியதில்லை. கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு, அது வீழ்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. தற்போது கியூபா அமெரிக்காவிடம் உதவி கோரி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பேசுவோம். இதற்கிடையில், நான் […]

தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே மஹிந்த விசாரிக்கப்படுகின்றார்; அவர் கைதானால் அரசு கவிழும் – விமல் வீரவன்ச

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தரமற்ற நிலக்கரி […]