மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் விநியோகத்தில் உள்ள சிக்கல்களைப் போர்க்கால அடிப்படையில் களைய வேண்டும் என முதல்வர் […]
“திமுக-வுடன் எடப்பாடி கூட்டணி பேசவில்லை!” – சி.வி.சண்முகம் புகாருக்கு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மறுப்பு!

சென்னை: அதிமுக-வுக்குள் நிலவும் அதிகாரப் போட்டி முற்றியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் இன்று சபாநாயகரைச் சந்தித்துத் தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், சி.வி. சண்முகத்தின் குற்றச்சாட்டுகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “திமுக-வுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசினார் என்பது முற்றிலும் பொய்யான மற்றும் அவதூறான தகவல். அமைச்சர் பதவியின் மீதுள்ள ஆசையாலும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே சி.வி. சண்முகம் […]
“தாய்மை கலந்த மருத்துவச் சேவை!” – உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து!

சென்னை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மே 12) உலகம் முழுவதும் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செவிலியர்களின் மகத்தான சேவையைப் போற்றும் வகையில் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தன்னலம் கருதாத மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடைய செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! […]
திரு சதாசிவம் சிவஞானராசா (குலம்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம், பெருங்காடு வேம்படியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg AG வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம் சிவஞானராசா அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவானந்தினி அவர்களின் அன்புக் கணவரும், சயந்தினி, சிந்துஜன், சுஜந்தி, சுவேந்தினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், உலகேஸ்வரி(மணி- இலங்கை ), கமலரெட்ணம்(வேவி- கனடா), சிவராஜா(ஜேர்மனி), சிவானந்தராஜா(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), சிவபாலன்(சுவிஸ்), […]
பாலியல் துஷ்பிரயோகம்: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியருக்கு வாழ்நாள் தடை!
பேராதனை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு அந்தப் பல்கலைக்கழகத்தின் செனட் சபைக்கு (Senate) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக வளாகத்தினுள் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்னவிடம் (W.A. Tilakaratne) முதுதத்துவமாணி (M.Phil) பட்டத்தைப் பயின்று வந்த அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் தர விரிவுரையாளர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை […]
விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்டால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி அறிவிப்பு

விசாரணை ஒன்றில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில், அந்த நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, “எனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், என்னிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட வேண்டாமா? அது பெறப்பட வேண்டும். ஒரு விசாரணையின் போது ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டால், அவரிடம் வாக்குமூலம் பெறுவது சாதாரணமான விடயம்,” என்று கூறினார். இலங்கையில் இத்தகைய […]
ஈரானின் 12 நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது!

ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதியை எளிதாக்க உதவுவதாகக் கூறப்படும் 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , பெய்ஜிங்கில் சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கவிருக்கும் சில நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஒரு அறிக்கையில் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதோடு, “பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கும் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கும் ஈரான் ஆட்சி பயன்படுத்தும் நிதி வலையமைப்புகளிலிருந்து அந்த […]
கடல் கொள்ளைக்குத் தீர்வு கோரி; மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி செவ்வாய்க்கிழமை (12) எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பொராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது பல மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து ஒரு காலப்பகுதிக்கு பாதிக்கப்பட்டது. […]
தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரம் ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு; முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைப்பு

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் 12.05.2026 இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது குறித்த மக்கள் தொடர்பகத்தில் கறுப்பு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்வாரம் நினைவுகூரப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நினைவுகூரல் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா கலந்துகொண்டிருந்ததுடன், […]
நல்லூரிலிருந்து தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி பவனி ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு ஊர்தி பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்தி பவனியானது, வட, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. இந்த ஊர்தி பவனியின்போது தியாக தீபத்தின் நினைவிடத்தின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.