மன்னாரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல்

ள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (12), மன்னாரில் மிக உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது துயரங்களைப் பகிர்ந்துகொண்டனர். கடந்த […]

பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்போருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வாடகைக்கு விடப்பட்ட அல்லது குத்தகைக்கு விடப்படும் தங்கும் விடுதிகள், வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கைகளின்படி, வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் சொத்துக்களை வாங்கும் தனிநபர்கள் அல்லது குழுக்கள், சொத்து உரிமையாளர்கள் சற்றும் எதிர்பாராத வழிகளில் அதனை குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே […]

சர்வதேச சந்தையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 100 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் இழப்பு ஏற்படும்?

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் இதே வேகத்தில் தொடர்ந்தால், சர்வதேச சந்தையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 100 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் இழப்பு ஏற்படும் என்று சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் எச்சரித்துள்ளார். தற்போது நிலவும் இந்த முடக்கம் இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால், எண்ணெய் விநியோகம் சீரடைய அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நாளொன்றுக்கு […]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உரம் வழங்க தவறினால் வீதிக்கு இறங்குவோம்

“மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உரத்தினை உடனடியாக பெற்றுத்தரனும் என்ற எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால், விவசாயிகளுடன் இணைந்து நாங்களும் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை,” என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் அதிகார சபை தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் நிதி வழங்கியுள்ள போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் […]

வேளச்சேரி இல்லத்தில் திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! விசிக ஆதரவுக்கு நேரில் நன்றி!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது அரசியல் நாகரிகப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அவரது வேளச்சேரி இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. இந்த ஆதரவின் மூலம் தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், திருமாவளவனை நேரில் சந்தித்து அவருக்குப் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த […]

“தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்!” – டி.டி.வி. தினகரன் நடவடிக்கைக்கு எம்.எல்.ஏ. காமராஜ் பதிலடி!

சென்னை: தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அமமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ. எஸ். காமராஜ், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து பேசியதற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். “சட்டமன்றத்தில் முதலமைச்சரைப் பாராட்டுவது தவறா? என் மீது கட்சி எடுத்த நடவடிக்கை குறித்து எனக்குக் கவலையில்லை. மன்னார்குடி தொகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் தடையின்றிச் சென்று சேர வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்த […]

அதிமுக கோட்டையில் முதல்வர் விஜய்! சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி நேரில் வரவேற்பு; அரசியல் களத்தில் அதிரடி மாற்றம்!

சென்னை: தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு இடையே, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி தரப்பு என இரு துருவங்களாகப் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, முன்னாள் அமைச்சர்கள் […]

சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்! காமராஜர் சிலைக்கு மரியாதை; செல்வப்பெருந்தகை உற்சாக வரவேற்பு!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், கூட்டணிக் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வரும் சி. ஜோசப் விஜய், இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். முதலமைச்சர் விஜய்யைத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அலுவலகத்திற்குள் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் […]

மண்ணடியில் காதர் மொய்தீனைச் சந்தித்தார் விஜய்! முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோனை!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது அரசியல் நாகரிகப் பயணத்தின் தொடர்ச்சியாக இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொய்தீனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை முதலமைச்சர் நேரில் வருகை தந்தார். முதலமைச்சரை வாசலுக்கே வந்து வரவேற்ற காதர் மொய்தீன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அவருக்குச் சால்வை அணிவித்துத் தங்களது வாழ்த்துகளைத் […]

டாஸ்மாக்கில் ‘கூடுதல் 10 ரூபாய்’ வசூல் அதிரடியாக நிறுத்தம்! முதல்வர் விஜய்யின் நடவடிக்கைக்கு மதுப்பிரியர்கள் வரவேற்பு!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவி வந்த முறைகேடுகளைக் களைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த சில ஆண்டுகளாக மதுபாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 முறை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரூ.10 கூடுதல் வசூல், பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் […]