நீட் தேர்வு அதிரடி ரத்து! வினாத்தாள் கசிவு புகாரால் தேசிய தேர்வு முகமை அதிரடி முடிவு; சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை!

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET-UG) நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், தேர்வின் நம்பகத்தன்மையைக் காக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்காக சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு புகாரால் தற்போது செல்லாததாகிவிட்டது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த […]

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை (12), வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் வாங்கி பருகினர்.

கபில சந்திரசேனவின் கைப்பேசித் தரவுகளைப் பெற உத்தரவு

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று (12) கொழும்பு கோட்டை நீதிவான் வசந்த அமரசேன முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். விசாரணையின் போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் பின்வரும் விடயங்களை முன்வைத்தனர்: மரணமடைந்தவரின் உடலிலிருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை அரச இரசாயன […]

சீரற்ற காலநிலை; ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் கலாபெவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நேற்று (11) மாலை முதல் இவ்வாறு திறக்கப்படும் வான்கதவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் […]

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் விசனம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை ஒரு உள்நாட்டு பொறிமுறைக்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயற்சிப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் கரிசனை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், செஞ்சிலுவை சங்கத்தினால் கடந்த 5 – 7ஆம் திகதி வரை கொழும்பில் மூடிய அறை கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய சுமார் 20 பிரதிநிதிகள் பங்கேற்றதாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ‘இனிவருங் […]

பெண்ணுரிமை குறித்து அதிருப்தி: பிரித்தானியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி துறப்பு!

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி கடிதத்தில்,”பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் பிரதமருடன் நான் பல ஆண்டுகளாக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். இந்தச் சமூகச் சீர்கேட்டைச் சரிசெய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் பிரதமரிடம் இருப்பதை நான் அறிவேன். […]

சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பரிசாக வழங்கினார் திருமாவளவன்!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை இன்று அவரது வேளச்சேரி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். நேற்று மு.க. ஸ்டாலின், சீமான் உள்ளிட்டோரைச் சந்தித்த முதல்வர், இன்று காதர் மொய்தீன், செல்வப்பெருந்தகை மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரைத் தொடர்ந்து திருமாவளவனைச் சந்தித்துள்ளார். வேளச்சேரி இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யைத் திருமாவளவன் வாசலுக்கே வந்து இன்முகத்துடன் வரவேற்று, பொன்னாடை […]

‘சங்கமம் 2026’; 5,000 கலைஞர்களின் பங்கேற்புடன் கொழும்பில் பரதநாட்டிய நிகழ்வு

உலக அரங்கில் இலங்கையின் கலாசாரப் பெருமையை உயர்த்தவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சங்கமம் 2026’ கலாசார நிகழ்வு மற்றும் கின்னஸ் உலக சாதனை முயற்சி குறித்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’ மற்றும் இலங்கையின் ‘சங்கமிழ் லியா ஹொலிடேஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக […]

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஏயார்பஸ் முறைகேட்டுக் குற்றத் தீர்ப்பு நியாயமாகி விடுவிக்கப்படுவேன் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 ‘ஏயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானார். சுமார் இரண்டு மணிநேரம் ஆணைக்குழுவில் தங்கியிருந்த அவர், வாக்குமூலத்தை வழங்கிவிட்டுச் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தேசிய விமானச் சேவைக்கு விமானங்களைக் கொள்வனவு செய்த இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் […]

14 வயது பாடசாலை மாணவியை கடத்திய குடும்பஸ்தர் கைது

14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை, சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து கடத்தி சென்ற திருமணமான இளைஞர் ஒருவர் தனமல்வில பகுதியில் வைத்து திங்கட்கிழமை (11) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை பிரதேசத்தை சேர்ந்த தனது மகள் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்களால் திங்கட்கிழமை (11) காலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தனமல்வில பொலிஸாரால் சர்வோதய சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடையில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, வெல்லவாய திசையிலிருந்து வந்த மோட்டார் […]