தீ விபத்துக்குள்ளான யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை பெற அமைச்சர் நடவடிக்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் , களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்குள்ளான வைத்தியசாலையின் களஞ்சியசாலையை நேரில் சென்று பார்வையிட்டு, விபத்து குறித்து பணிப்பாளரிடம் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வைத்தியசாலையில் இடம்பெற்றது, மிக வேதனைக்குரிய கவலைக்குரிய விடயமாகும். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலை தீ பற்றியதும் அதனை […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கபில சந்திரசேன மரண விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கோட்டை நீதவான் பசன் அமரசேன வழங்கிய உத்தரவிற்கமைய, கொழும்பு பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையில் 5 பேர் கொண்ட விசேட சட்ட வைத்திய நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தற்போது கொழும்பு நீதிமன்ற மருத்துவ மற்றும் நஞ்சியல் நிறுவனத்தில் உடற்கூற்று பரிசோதனையை முன்னெடுத்து வருகின்றனர். கபில சந்திரசேன தூக்கிட்டு, […]
34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்

இலங்கை முழுவதும் உள்ள 34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற நடவடிக்கை வரை கொண்டு செல்லப்பட்ட குற்றங்கள் மட்டுமே இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் இவை என்ற போதிலும் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு பெரியோர்களோ அல்லது சிறுவர்களோ முன்வருவதில்லை […]
செம்மணி மயான எரி தகன மேடையை உடைத்து மனித என்புகளை மீட்க நடவடிக்கை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு அடியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதியை அகழ்ந்து எடுப்பதற்கு, குறித்த மேடையை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பின்னரே மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் […]
அதிமுகவில் அதிரடித் திருப்பம்! சி.வி.சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏ-க்கள் ரகசிய ஆலோசனை!

சென்னை: தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக-வில் மிகப்பெரிய பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டத்தை 5 எம்.எல்.ஏ-க்கள் புறக்கணித்த நிலையில், தற்போது சி.வி. சண்முகம் தலைமையில் 36 எம்.எல்.ஏ-க்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது. தவெக ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களில், தற்போது 116 இடங்கள் (காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன்) விஜய்க்கு […]
விஜய்க்கு விசிக பச்சைக்கொடி! ‘ஆளுநர் ஆட்சி’ ஆபத்தைத் தவிர்க்கத் திருமாவளவன் அதிரடி முடிவு!

சென்னை: தமிழக அரசியலில் பல நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கத் தேவையான மீதமுள்ள 2 இடங்களுக்கான ஆதரவை வழங்க விசிக ஒப்புக்கொண்டுள்ளதால், விஜய் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழல் நீடித்தால், ஆளுநர் ‘குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு’ (President’s Rule) பரிந்துரைக்கக்கூடும் என்ற தகவல் பரவியது. இத்தகைய சூழலில், பாஜக-வின் […]
“பதவி கேட்டு நாங்க கதவு தட்டல!” – விசிக பற்றி பரவும் வதந்திகளுக்கு ரவிக்குமார் எம்.பி. முற்றுப்புள்ளி!

சென்னை: தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக பதவிகள் கேட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அக்கட்சியின் எம்.பி. ரவிக்குமார் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். “விசிக எந்தப் பதவியும் கோரவில்லை; பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை” என்று அவர் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது. காங்கிரஸ் […]
எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஆசியான் நாடுகள் பிலிப்பைன்ஸில் ஒன்றிணைவு

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் எரிசக்தி விலையேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ (ASEAN) தலைவர்கள் பிலிப்பைன்ஸில் நேற்று கூடியுள்ளனர். இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பேசிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், ஈரான் போரினால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார். குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் தென்கிழக்கு […]
“ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்!” – அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஈபிஎஸ் அதிரடிப் பதிவு!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள எக்ஸ் (X) தளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு அவர் இந்த வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு […]
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? விசிக-வின் ‘மெகா’ முடிவு இன்று மாலை 4 மணிக்கு வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் சஸ்பென்ஸ் இன்று மாலை ஒரு முடிவுக்கு வரவுள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான மீதமுள்ள 2 இடங்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) ஆதரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் பலம் தற்போது 116 ஆக உள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட வேண்டிய விசிக-வின் முடிவு, தற்போது மாலை […]