“மறு தேர்தல் மட்டுமே தீர்வு; செயற்கை சுவாசத்தில் ஆட்சி தேவையா?” – இயக்குநர் தங்கர் பச்சான் காட்டம்!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் குறித்துத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் தங்கர் பச்சான், மறு தேர்தலைச் சந்திப்பதே நிலையான ஆட்சிக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழலைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “தவெக ஆட்சி அமைக்கவும், திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடும் சூழலே நிலவுகிறது. நிபந்தனையற்ற ஆதரவு என்பது, […]
யாழ்.அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை; அநுரவை நேரில் பார்க்கச் சென்ற தாயைச் சந்திக்க விடவில்லை!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவன் அருள் பயஸின் படுகொலைக்கு நீதி கோரி, ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற போது அவரை சந்திக்க விடாமல் எங்களை தடுத்து விட்டார்கள் என சிறுவனின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் […]
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை?

வாஷிங்டன் டிசி: அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் […]
மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிப்பு?

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும், 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மின் உற்பத்திச் செலவு அதிகரித்தமையால் இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை தொகை […]
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் 7,026 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு, ஏப்ரல் மாத இறுதியில் 6,759 மில்லியன் டொலர்கள் வரை குறைந்துள்ளது. கையிருப்பு சொத்துக்களின் பிரதான அங்கமான வெளிநாட்டு செலாவணி கையிருப்பும் ஏப்ரல் மாதத்தில் 6,800 மில்லியன் […]
இலங்கையில் நீரில் மூழ்கி எற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க தேசிய செயல்முறை

நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வலுவான தேசிய செயல்முறையை உருவாக்கும் நோக்கில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீர் தொடர்புடைய உயிரிழப்புகளை குறைத்து, நாடு முழுவதும் பொது பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பல்துறை கட்டமைப்பை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். நீண்டகாலமாக அவசியமாக இருந்த ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு செயல்முறையை உருவாக்கும் முதல் கட்டமாக இக்கூட்டம் அமைந்தது. பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் […]
ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை

ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக, எதிர்வரும் மே 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்று அவரது காரல்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு: 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 18% உயர்வு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), 180 அலகுகளுக்கு (Units) மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு: பாதிக்கப்படும் தரப்பினர்: மாதத்திற்கு 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இந்த 18% கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். விலக்கு அளிக்கப்பட்டவர்கள்: 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் பிரிவினருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் […]
“தம்பி திருமா, உடனே விஜய்க்கு ஆதரவு கொடுங்கள்!” – பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி வேண்டுகோள்!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறியைத் தீர்க்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடனடியாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ராமதாஸ் தனது அறிக்கையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது, […]
பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் […]