நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படுகின்றது!

நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கருத்துக்களைத் தாம் வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கடந்த சர்வதேச தொழிலாளர் தினமான மே தின மேடைகளில், அரசாங்கத் தரப்பினர் நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். நீதிமன்றத்தில் இருந்து எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள தீர்ப்புகள் மற்றும் அவற்றுக்கான திகதிகளைக் குறிப்பிட்டு, அந்தத் தீர்ப்புகளைக் கைதட்டி வரவேற்கத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி […]
மாலைதீவு ஜனாதிபதி இலங்கை விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக, அவர் இன்று (3) மாலை 5.35 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். இலங்கை வந்த மாலைத்தீவு ஜனாதிபதி உட்பட தூதுக்குழுவினரை பிரதமர் ஹரிணி அமரசூரிய சம்பிரதாயமாக வரவேற்றார். இந்நிலையில் அவரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதியுடன் […]
தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் மட்டும் தீர்மானிக்க முடியாது – ஐங்கரநேசன்

அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவருவது தொடர்பாக தமிழ் அரசியல் வெளியில் அதிகம் பேசப்படுகின்றது. இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் தீர்வாக எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக தமிழர் தரப்பில் காலத்துக்கு காலம் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுவந்துள்ளன. வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு இத்தகைய முன்மொழிவுகள்தாம். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்ட வரைபும் குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழ் சட்டத்தரணிகள் பேரவை […]
திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

யாழ்ப்பாணம் சுருவில் ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன் 01-05-2026 அன்று இறைவன் திருவடி நிழலின் சேர்ந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புப் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான நடராஜா – சந்தானலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும் கதிர்காமநாதனின் அருமை மனைவியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 05–05-2026 செவ்வாய்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 வரை 8911 Woodbine Ave. Markham ல் அமைந்துள்ள […]
காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: தப்பிக்க முயன்ற கைதி காயம்

இன்று மாலை காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற இரண்டு கைதிகள் மீது சிறைக்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி காயமடைந்துள்ளார். கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற இருவரையும் தடுப்பதற்காக அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு கைதி காயமடைந்ததுடன், மற்றைய கைதி சிறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் இடது தோள்பட்டையில் காயமடைந்த கைதி, மேலதிக சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் காலி தேசிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம்

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ […]
மருதங்கேணியில் பொலிஸ் – சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்: சமூகச் சீர்கேடுகளைக் களைய அதிரடித் தீர்மானங்கள்

மருதங்கேணி பொலிஸ் காரியாலய மண்டபத்தில் இன்று (03.05.2026) பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக சமூகத்தில் இடம்பெற்று வரும் முக்கிய குற்றச் செயல்கள் மற்றும் அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் உதவி அத்தியட்சகர் (ASP) மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோர் விரிவான விளக்கங்களை வழங்கினர். இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு AI தொழில்நுட்பத் தவறுகளும் விழிப்புணர்வும் வடமராட்சி […]
அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முதலாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்கள் தொடர்பில் காலாண்டுக்கு ஒரு முறை கலந்துரையாடுவது வழமையானதாகும் எனவும், அந்த வகையில் நடப்பாண்டில் முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது எனவும் […]
“திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை” – அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்!

சென்னை: “மக்கள் நலனிலும், மாணவர்கள் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறை இல்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்குத் தடையாக இருந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் விதியை நீக்கியுள்ளதை வரவேற்றுள்ளார். இந்த விதி மாற்றத்தின் மூலம், இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகளைத் தொடங்க […]
மரணத்திலும் பிரியாத தாய்ப்பாசம்: ஜபல்பூர் படகு விபத்தில் லைஃப் ஜாக்கெட் இருந்தும் தாய், மகன் உயிரிழந்தது ஏன்? – மர்மம் விலகியது!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பர்கி அணை படகு விபத்தில், 39 வயதான மெரினா மாஸ்ஸி என்ற தாய், தனது 4 வயது மகன் திரிஷானை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தும் அந்தத் தாய் ஏன் உயிரிழந்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ விபத்தின் கோரத்தையும் பாதுகாப்பு குறைபாட்டையும் அம்பலப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த தருணத்தில் படகிற்குள் நீர் புகுந்தபோதுதான், ஊழியர்கள் அவசர அவசரமாக […]