2026 வரவுசெலவுத் திட்டத்தின் படி தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

2026 வரவுசெலவுத் திட்டத்தின் படி, அரச துறை நிறுவனங்களில் தற்காலிக, (நாட்சம்பளம்), பதிலீடு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்பதுடன், எதிர்காலத்தில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைவான சபைகளின் தலைவர்களுக்கு அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவின் […]

நீர்த்தேக்கத்தில் மூதாட்டியின் சடலம்

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், அது குறித்து நேற்று(01) மாலை 4 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலையடுத்து, மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹட்டன் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், […]

நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய குஜராத்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: குஜராத் பெங்களூரு: 155/10 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் 40 (24), விராட் கோலி 28 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷாட் கான் 3/22 [3.2], ரஷீட் கான் 2/19 [4], ஜேஸன் ஹோல்டர் 2/29 [4]) குஜராத்: 158/6 (15.5 ஓவ. ) […]

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று 3 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணியின் நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 244 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டவற்றில் 240 மனித எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘மலர் நிலவு’ மே மாதத்தின் சந்திரன் – நாசா நிறுவனம்

மே மாதத்தின் இந்த முதலாவது முழு நிலவை மலர் நிலவு (Flower Moon)என பெயரிட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (01) தென்பட்ட நிலவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாசா இதனை குறிப்பிட்டுள்ளது. வசந்த காலத்தில் பூக்கள் அதிகமாகப் பூப்பதைக் குறிக்கும் அடையாளமாகவே இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி தென்படவுள்ள முழு நிலவு MicroMoon என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் நிலவு பூமிக்கு […]

தனியார் வங்கி நிதி மோசடி : 2,619 தடவைகள் நடந்த கொடுக்கல் வாங்கல் வழக்கு

தனியார் வங்கியொன்றின் பொது பேரேட்டுக் கணக்கிலிருந்து (General Ledger) 13 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தரவுகளை உள்ளீடு செய்த அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (30) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார். இந்த மோசடி தொடர்பாக விளக்கமறியலில் உள்ள லஹிரு ஹர்ஷண, பதும் சங்கல்ப, சாரங்க சேனாதீர உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கையில், முதலாவது […]

பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை

மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் […]

உள்நாட்டுப் போரில் மியான்மரில் இராணுவத்தின் பிடிபலமடைகிறது

மியான்மரில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரில், தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. போர் ஆரம்பிக்கப்பட்ட தொடக்க காலத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல முக்கிய இடங்களை இழந்த ராணுவம், தற்போது ‘கட்டாய ராணுவச் சேர்க்கை’ மூலம் இலட்சக்கணக்கான புதிய வீரர்களைத் திரட்டி, அதிரடித் தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராகி வருகிறது. மறுபுறம், எதிர்ப்புப் படைகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் சீனாவின் அழுத்தம் காரணமாகக் கிளர்ச்சிக் குழுக்கள் தற்போது பலவீனமடைந்துள்ளன. மியான்மரில் உள்ள தனது பல […]

மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே – திலித் ஜயவீர

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நாடக அரசியலுக்கு இனிமேலும் எதிர்காலம் இல்லை எனவும், மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே எனவும் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார். கொழும்பு ஹென்றி பெத்ரிஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் மிகப்பெரிய செல்வம் அதன் மனித வளமாகும். ஒரு தொழில்முனைவோர் அரசு உழைக்கும் […]

அரசாங்கத்தின் 18 மாத ஆட்சியில் “தேசிய பாதுகாப்பு தோல்வி” – சுரேன் ராகவன்

அரசாங்கத்தின் 18 மாத ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. அதனால் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைவரும் ஒன்றுதிறளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (1) பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கழிந்தும் மக்களுக்கு அளித்த […]