பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; தேரரிடம் வாக்குமூலம் பதிவு

அனுராதபுரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அனுராதபுரம் புனித பூமியில் உள்ள பிரதான விகாரையொன்றின் விகாராதிபதி மற்றும் மேலும் இருவரால், 15 வயதுடைய சிறுமி ஒருவர் பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பவ […]

இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 35 டெக்ஸ்டொப் கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கைபேசிகள், 100 சிம் […]

தலைமன்னார் – தனுஷ்கோடி; ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடக்க இந்தியத் தம்பதி சாதனை முயற்சி!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பை விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் ஊடாக மீள உறுதிப்படுத்துகின்ற வகையில், இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையான ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடப்பதற்கு இந்தியத் தம்பதியினர் விசேட சாதனை முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளனர். மனிபால் வைத்தியசாலையினது ஏற்பாட்டிலே முன்னெடுக்கப்படுகின்ற இந்தச் சவாலான கடல் கடந்த நீச்சல் பயணமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் கலாசாரப் பகிர்வையும் பறைசாற்றுகின்ற ஒரு வரலாற்று மைல்கல்லாக அமையவுள்ளது என மனிபால் வைத்தியசாலையினது […]

வடக்கில் உள்ள பிரச்சினைகளை வைத்தே இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை தக்கவைத்துக்கொள்கின்றார்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

“வடக்கிலும் தையிட்டி பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியலை தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் உருவாக்கிய பிரச்சினைகள் புற்றுநோய் […]

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்களை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீதியில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இளைஞர் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்துவதாக கடுவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த இளைஞர்கள் வாட்ஸ்அப் குழுவொன்றின் […]

இன்று உயிரை மாய்த்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் இறுதிக்கிரியை

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த, ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் இறுதிக்கிரியைகள் இன்று சனிக்கிழமை (02) பிற்பகல் நடைபெறவுள்ளன. கடந்த 30ஆம் திகதி இவர் தனது வீட்டின் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. […]

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் உட்பட மூவர் கைது!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 56.25 லீற்றர் (75 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதேவேளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாகொட பகுதியில் […]

கொழும்பின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) படி, மார்ச் மாதத்தில் 2.2% ஆகக் காணப்பட்ட ஒட்டுமொத்த வருடாந்த பணவீக்க விகிதம், ஏப்ரல் மாதத்தில் 5.4% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.7% ஆக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 2.8% ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் (Non-Food Group) பணவீக்கம் மார்ச் மாதத்தில் 2.9% இலிருந்து ஏப்ரல் மாதத்தில் 6.8% ஆக அதிகரித்துள்ளது. நுகர்வோர் மனநிலை 2024 ஜூன் மாதத்திற்குப் பின்னர் மிகக் […]

சுற்றுலாத்துறை: வளர்ச்சியை மீட்டெடுக்க ஆசிய சந்தைகளை இலக்கு வைக்கும் இலங்கை

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலகளாவிய ரீதியில் சவால்கள் நிலவிய போதிலும், இலங்கையின் சுற்றுலாத்துறை பின்னடைவுகளைத் தாண்டி முன்னேறி வருவதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (SLTPB) தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் (CCC) அண்மையில் நடைபெற்ற ஏப்ரல் மாதக் குழு கூட்டத்தில் அவர் இதனைத் குறிப்பிட்டார். இது குறித்து ஹேவாவசம் கூறுகையில்: “மத்திய கிழக்கு நெருக்கடியினால் சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த […]

மத்திய கிழக்கு பதற்றம்: போர் அபாயக் காப்புறுதி கட்டணம் 50% உயர்வு – இலங்கை வர்த்தகம் பாதிப்பு

மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் பயணிக்கும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்புறுதி பிரீமியங்கள் (War risk insurance premiums) 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் மகளிர் சம்மேளனத்தின் (WCIC) தலைவி கயானி டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சில தீவிரமான சந்தர்ப்பங்களில், ஒரு பயணத்திற்கான காப்புறுதி கட்டணம் கப்பலின் மதிப்பில் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) […]