அராலியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பணிப்பெண் ஒருவரின் ஊடாக பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றையதினம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பல தடவைகள் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை […]
அரிசியை அதிக விலைக்கு விறற்றவருக்கு அபராதம்

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, அக்கரைப்பற்று பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த வர்த்தக நிலையம் 2 கிலோ அரிசியை 800 ரூபாவிற்கு, […]
சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது. 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலைநேரத்தில் 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர். பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது. 1886 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி போராட்டத்தின் தீர்மானமிக்க தருணம். முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தொழிலாளர்கள் மீது நடத்திய […]
பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கமானது 2.2 சதவீதமாக பதிவாகியிருந்தது. அதேநேரம் கடந்த மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிரித்துள்ளது. இது தவிர உணவல்லா பணவீக்கமானது கடந்த மார்ச் […]