மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் பணிப்பு

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார அமைப்பினர் ஆகியோரால் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டு, குளத்தினை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவுமாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உறுதியளித்துள்ளார். நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் விவசாயிகள் ஆகியோருக்கிடையில் […]
தையிட்டி வீதித் தடை குறித்து விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம், வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உரித்துடமைக்கு உட்பட்ட தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையிடலை எதிர்வரும் 2026.05.11ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு குறித்த வீதியினை […]
சர்வதேச தொழிலாளர் தினம்; கறுப்பு நாளாக முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

திருகோணமலை – பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள், சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01.05.2026), கறுப்பு ஆடை அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் முத்துநகர் சந்தி அருகே இடம்பெற்றது. கடந்த பல வருடங்களாகத் தமது வயல் காணிகளுக்கான தீர்வினைக் கோரிவரும் இவ்விவசாயிகள், இம்முறை மே தினத்தைக் கறுப்பு நாளாகக் கருதி வீதியில் இறங்கினர். விவசாய காணிகளைச் சூறையாடி, தனியார் நிறுவனங்களுக்குச் சூரிய […]
இலங்கையில் முதன் முறையாக உழைக்கும் மக்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு. தெற்கு மற்றும் மலையகம் அனைத்து பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். இலங்கையில் முதன் முறையாக உழைக்கும் மக்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாம் இரண்டு வகையான தீர்மானங்களை எடுத்துள்ளோம். ஒன்று மக்களுக்கானது மற்றொன்று […]
பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல்?

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30) முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ் (Dan Jarvis) கூறுகையில், இந்த அச்சுறுத்தல் மட்ட உயர்வு லண்டன் தாக்குதலால் மாத்திரம் ஏற்பட்டதல்ல என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் […]
ஜனாதிபதி இன்று செல்வந்தர்களின் ஒரு கைப்பாவையாக மாறியுள்ளார்

76 வருட காலமாக தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அவர்களது உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், ஆட்சியின் 77 ஆவது ஆண்டில் உழைக்கும் மக்களை முற்றாக மறந்து செயற்படுகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய ஒற்றைத் தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களின் உரிமைகளைக் கத்தரித்து, உயர்மட்ட வர்த்தக சமூகத்தின் தேவைகளை […]
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை: மகனிடம் ஒப்படைக்கப்பட்ட கார் மற்றும் நகைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளினி திலீபன் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகளும் மருமகனும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இப்படுகொலை தொடர்பான முறையான மரண விசாரணைகளை (Inquest) எதிர்வரும் மே மாதம் 20-ஆம் திகதி முன்னெடுக்க நீதவான் உத்தரவிட்டார். வழக்கின் சான்றுப் பொருட்களாகக் காவற்துறையினரால் மீட்கப்பட்டிருந்த மறைந்த விரிவுரையாளரின் தங்க நகைகள் மற்றும் அவருக்குச் […]
“வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி-நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவை நாம் முன்வைத்துள்ளோம்என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டு;ள்ளதாவது வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவை நாம் முன்வைத்துள்ளோம். இது, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உபதவிசாளர் அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். வாகரைப் பிரதேச சபை குறைந்த […]
கருவூல நிதி மோசடி விவகாரம்: உயிரிழந்த உதவி இயக்குநரின் பிரேதப் பரிசோதனைக்கு நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு நியமனம்

அரசு கருவூலத்துடன் தொடர்புடைய 2.5 மில்லியன் டாலர் நிதி மோசடி புகார் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி இயக்குநரின் பிரேதப் பரிசோதனையை முன்னெடுக்க நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: நிதி அமைச்சைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இந்த மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவரான உதவி இயக்குநரின் உடல் நேற்று மதியம் குளியாப்பிட்டிய, பஹலவீரம்புவ பகுதியில் உள்ள […]
Markham & fince சந்திப்பில் பாரிய விபத்து

Markham & fince சந்திப்பில் பாரிய விபத்து 12.45 மணியளவில்சந்தியில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.மின்சார கம்பம் சேதமடைந்துள்ளது. முதலுதவி பிரிவினர் காணப்படுகின்றனர்.