மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சஜித் பிரேமதாச சவால்

மக்கள் தங்களது மக்கள் ஆணையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டதாகவும், கூட்டு முயற்சியாக முன்னோக்கிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்க […]

கனடா மருத்துவமனையில் ‘போலித் துப்பாக்கி’ வைத்திருந்த நோயாளி: 76 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது நயாகரா காவல்துறை

நயாகரா பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர், மருத்துவமனையில் நோயாளியாக இருந்தபோது அவரிடம் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் மீது காவல்துறை சுமார் 100 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 28 அன்று செயின்ட் கேத்தரின்ஸில் (St. Catharines) உள்ள மரோட்டா ஃபேமிலி மருத்துவமனைக்கு (Marotta Family Hospital) அழைக்கப்பட்டதாக நயாகரா பிராந்திய காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் அங்கு சென்றபோது, அந்த நபர் வைத்திருந்தது ஒரு “போலித் துப்பாக்கி” (Imitation […]

முக்கிய போக்குவரத்து பாதிப்பு: மில்டன் அருகே 401 நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதல் – இரண்டு வழித்தடங்கள் மூடல்

மில்டன் (Milton) அருகே நெடுஞ்சாலை 401-ன் மேற்கு நோக்கிய (Westbound) பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த பல வாகன விபத்துகள் காரணமாக, இரண்டு வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தத் தடையானது “நீண்ட நேரம்” நீடிக்கக்கூடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, ‘ரீஜினல் ரோடு 25’ (Regional Road 25) பகுதியில் இந்த வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு நிகழ்ந்த பல வாகன மோதல்கள் மற்றும் சாலையில் ஏற்பட்ட கடும் எண்ணெய் கசிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ […]

பீபா (FIFA) மாநாடு: உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக வான்கூவரில் பலத்த பாதுகாப்பு

வியாழக்கிழமையன்று வான்கூவரில் நடைபெற்ற 76-வது பீபா (FIFA) மாநாடு, உலகம் முழுவதிலுமிருந்து கால்பந்து அதிகாரிகளை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் சோதித்துப் பார்க்கும் ஒரு களமாக வான்கூவர் நகரம் மாறியுள்ளது. வான்கூவர் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வரவிருக்கும் பீபா உலகக்கிண்ணப் போட்டிகளின் போது நகரம் எவ்வாறான பாதுகாப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கான ஒரு ஆரம்பகால முன்னோட்டமாக இது அமைந்தது. சுமார் 200-க்கும் […]

அரசாங்கம் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது – சாணக்கியன்

அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று (30) மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிலே மத்திய வங்கியுடன் சம்பந்தப்பட்ட, திறைசேரியுடன் சம்பந்தப்பட்ட நிதி மோசடியா அல்லது நிதி களவு இல்லையா […]

சின்மயா மிஷனின் அமிர்த யாத்திரை; யாழ்ப்பாணத்தில் 10 இலட்சம் இளைஞர்கள் இலக்கு

சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் “சின்மயா அமிர்த யாத்திரை” யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. சின்மயா மிஷனின் இளைஞர் அமைப்பான ‘யுகேந்த்ரா’ (Yugendra) ஊடாக இந்த விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம், சுமார் 35,000 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டது. நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளினூடாக பயணிக்கும் இந்த யாத்திரை, எதிர்வரும் அக்டோபர் மாதம் புதுடெல்லியில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு வியாழக்கிழமை […]

பதின்ம வயதுடையவரின் எலும்புக்கூடு செம்மணியில் மீட்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் தொகுதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு அருகில் கறுப்பு நிறத்தில் வித்தியாசமான மண் படுக்கை ஒன்றும் கண்டறியப்பட்டது. குறித்த பகுதியில் மனித எச்சங்கள் உள்ளனவா என நேற்றுமுன் தினமும், நேற்றும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போது, அங்கிருந்து நாணயக் குற்றி ஒன்று […]

2010 தொடக்கம் 2026 ஏப்ரல் வரை 2,629 பேர் உயிரிழப்பிலிருந்து மீட்கப்பட்டனர்!

இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் (2026) மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் போது, நீரில் மூழ்கவிருந்த 19 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கை கடலோர பாதுகாப்புப் படை (SLCG) வெற்றிகரமாக மீட்டுள்ளது. நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களைக் கொண்ட கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் 16 உயிர்காப்பு நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களில் கடமையாற்றும் உயிர்காப்பு வீரர்களால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 வெளிநாட்டவர்களும், 5 […]

உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கு மக்கள் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக இன்று (01) போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது 6 யுத்தம் […]

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல முயற்சிகளைச் செய்கின்றது!

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. அதை செயல்முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிரூபித்து வருகின்றது என மே தின வாழ்த்துச் செய்தியில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மே தின தினத்தை முன்னிட்டு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் […]