நிதி அமைச்சின் செயலாளரின் இல்லத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீதான வன்முறைக்கு கூட்டு எதிர்க்கட்சி கண்டனம்

பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளை கூட்டு எதிர்க்கட்சி (Joint Opposition) வன்மையாகக் கண்டித்துள்ளது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மனிதக் கழிவுகள், சாணம், அழுகிய தக்காளி மற்றும் எரியும் பட்டாசுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து அக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தனது “அருவருப்பையும் சீற்றத்தையும்” வெளிப்படுத்தியுள்ளது. மக்களின் வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவதைத் தடுப்பதற்காக ஜே.வி.பி (JVP) “காடைத்தனம் […]

அருச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு: இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியைக் காட்டித் தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ். பிராந்திய அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர். பெரியவிளான் காணிப் பிணக்கின் போது இடம்பெற்ற இந்தச் சம்பவம், தற்போது மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணையாகவும் உருவெடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து மற்றைய தரப்பினரை நோக்கி நீட்டி, […]

அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை நிறுத்தம்?

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய அரசாங்க வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பெட் ஸ்கேன் (PET scan) பரிசோதனைகள் மார்ச் 27 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் FDG – Fluoro deoxy glucose எனும் கதிரியக்க இரசாயனப் பொருள் இல்லாததே இதற்குக் காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் […]

பாங்கொக்கிலிருந்து 40 பௌத்த பிக்குகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்த முயற்சி

40 பௌத்த பிக்குகளைப் பயன்படுத்தி பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அண்மையில் பாங்கொக்கிலிருந்து பௌத்த பிக்குகளைக் கொண்டு கடத்தப்பட்ட பாரிய போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டிருந்தது. இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல், மேலும் 40 பிக்குகளை பாங்கொக் அழைத்துச் சென்று அங்கிருந்து போதைப் பொருட்களை நாட்டுக்கு கடத்தி வர சகல திட்டங்களையும் வகுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தப் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளின் பிரதான சூத்திரதாரி ஒர் […]

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் உட்பட அறுவர் கைது

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாகச் சட்டவிரோதமாகத் தனுஷ்கோடிக்கு வந்து, தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் அனைவரும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது இலங்கையின் பொருளாதார நிலை சீராகியுள்ளதால், முகாமில் தங்கியுள்ளவர்கள் மீண்டும் தாய்நாடு […]

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நேற்றைய அகழ்வு நடவடிக்கை பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது. நேற்று எந்தவிதமான மனித எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்படவில்லை முதற்கட்டமாக புதைகுழி அமைந்துள்ள பிரதேசத்தை தயார்ப்படுத்தும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டது. நேற்று ஆரம்பமாகியுள்ள மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்கான […]

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டை முற்றுகையிட சென்றோர் மீது சாணி வீச்சு!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட ‘நவ ஜனதா பெரமுன’ கட்சியின் ஆதரவாளர்கள் குழுவினர் இன்று (28) காலை பெலவத்தை, அகுரேகொட பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட சிலரது மீது சாணத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை […]

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்காவிற்கு வழங்கிய மேலும் 600,000 டொலர் காணாமல் போயுள்ளது: அமைச்சர் நளிந்த தகவல்

இலங்கைத் தபால் திணைக்களத்தினால் அமெரிக்கத் தபால் சேவைக்கு (US Post) வழங்கப்பட்ட மேலும் 600,000 அமெரிக்க டொலர்ர் நிதி காணாமல் போயுள்ளமை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் பேசிய அவர், தங்களுக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என அமெரிக்கத் தபால் சேவை விடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]

குடும்பத் தகராறு; நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி, சகோதரன் மீது கணவன் கத்திக்குத்து!

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்று (27) இந்த வழக்கு விசாரணைக்காக மனைவியும் அவரது சகோதரனும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, […]

திறைசேரியினால் ஹேக்கர்களுக்கு பணம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

திறைசேரியினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களுக்கு (Hacker) வழங்கப்பட்டமையானது அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தில், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை விமான சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தச் செயல்பாட்டில் பொறுப்பற்ற முறையில் […]