இலங்கைத் தபால் திணைக்களத்தினால் அமெரிக்கத் தபால் சேவைக்கு (US Post) வழங்கப்பட்ட மேலும் 600,000 அமெரிக்க டொலர்ர் நிதி காணாமல் போயுள்ளமை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் பேசிய அவர், தங்களுக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என அமெரிக்கத் தபால் சேவை விடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.