சபாநாயகரைச் சந்தித்த பிரான்ஸ் செனட் தூதுக்குழு

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது. இந்தத் தூதுக் குழுவில் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் (Ms. Vanina Paoli-Gagin), குறித்த சங்கத்தின் பிரதித் தலைவர் டிடியர் மெரி […]
தெஹிவளை டூ டோன் என்ற பாதாள உலக நபர் ஹெரோயினுடன் கைது
டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் அறிவுறுத்தலின் பேரில், பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்கவின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சஞ்சீவ பெர்னாண்டோ எனப்படும் டூ டோன் என்றழைக்கப்படும் 49 வயதுடைய நபரே இவ்வாறு […]
பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, இம்முறை வெசாக் வாரம் […]
வெனிசுவேலா ஜனாதிபதி கைது; முன்கூட்டியே கணித்து பந்தயம் கட்டிய படை வீரர் கைது

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம் ஈட்டிய அமெரிக்கச் விசேட படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் ‘ஃபோர்ட் பிராக்’ தளத்தில் பணியாற்றும் மாஸ்டர் சார்ஜென்ட் கேனன் கென் வான் டைக் என்பவர் மீது இந்தத் திருட்டு மற்றும் மோசடி முறைப்பாடு சுமத்தப்பட்டுள்ளது. வெனிசுவேலா ஜனாதிபதியை இரகசியமாகத் தூக்கி வரும் ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ திட்டத்தில் வான் டைக் ஒரு முக்கிய […]
இலங்கையில் மீண்டும் தட்டம்மை

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இந்த நோய் பாதிப்புக்குள்ளான இரு சிறுவர்கள் அண்மையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தட்டம்மையை முற்றாக ஒழித்த நாடு என 2019ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும், 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் ஆங்காங்கே தட்டம்மை நோயாளர்கள் பதிவாகத் தொடங்கினர். 2025 ஜனவரி முதல் இதுவரை எந்தவொரு நோயாளரும் பதிவாகாத நிலையில், […]
8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக மெட்டா அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தவிர வெற்றிடமாக உள்ள ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் நிரப்பப்போவதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மாத்திரம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்காக 135 பில்லியன் டொலர்களை மெட்டா செலவிடத் திட்டமிட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் செலவிடப்பட்ட மொத்தத் தொகைக்குச் சமமானதாகும். செயற்கை கருவிகளைப் பயன்படுத்தும் ஊழியர்கள் […]
ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைப்பு!

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். ஜகார்யன் (H.E. Levan S. Dzhagaryan) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினுது சமன் ஹென்னாயக்க அவர்களும் கலந்துகொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையினூடாக மேலும் விரிவுபடுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. முக்கிய அம்சங்கள்: […]
நோர்வேயில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை?

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுவர்கள் சிறுவர்களாகவே வளர்வதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விளையாட்டுகள், நட்பு மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை ‘அல்காரிதம்களும்’ திரைகளும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டும். சிறுவர்களின் டிஜிட்டல் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கை இது.” பயனர்களின் வயதைச் […]
கர்தினால் விலகப்போவதாக வெளியான செய்தி பொய்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்கள் பதவி விலகப்போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று தெரிவித்துள்ளார். திருச்சபையின் விளக்கம்: வத்திக்கானின் அதிகாரம்: பேராயர்கள் தொடர்பான தீர்மானங்கள் அனைத்தும் வத்திக்கானினால் (Vatican) எடுக்கப்படுபவை. கத்தோலிக்க திருச்சபையின் நடைமுறைப்படி, ஒரு கர்தினால் 80 வயதை எட்டும்போது ஓய்வு பெற வேண்டும் என்ற விதி இருந்தாலும், அது குறித்த இறுதி […]
புதிய டிஜிட்டல் மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

WhatsApp மற்றும் Telegram செயலிகள் ஊடாக அனுப்பப்படும் ஆபத்தான “.apk” கோப்புகள் (files) மூலம் முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி நடைபெறும் விதம்: ஏமாற்று வழிகள்: இந்த நச்சு மென்பொருள் கோப்புகள் (malicious files) பெரும்பாலும் திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டணப் பட்டியல்கள் அல்லது அதிர்ஷ்ட லாபச் சீட்டு அறிவிப்புகள் போன்ற வடிவில் அனுப்பப்படுகின்றன. கட்டுப்பாட்டை இழத்தல்: பயனர்கள் இந்தக் கோப்புகளைக் கிளிக் செய்தவுடன், அவர்களது […]