சபாநாயகரைச் சந்தித்த பிரான்ஸ் செனட் தூதுக்குழு

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.

இந்தத் தூதுக் குழுவில் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் (Ms. Vanina Paoli-Gagin), குறித்த சங்கத்தின் பிரதித் தலைவர் டிடியர் மெரி (Mr. Didier Marie), செனட்டர் லோரன்ஸ் முலர் ப்ரோன் (Ms. Laurence Muller-Bronn) ஆகியோருடன், பல்வேறு அதிகாரிகளும் உள்ளடங்கியிருந்தனர்.

தூதுக்குழுவினரை வரவேற்ற சபாநாயகர், கடந்த எழுபது ஆண்டுகளாக பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் நீடித்துவரும் இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்தார். பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் வகிபாகத்தை அவர் வலியுறுத்தினார்.

தித்வா புயல் தாக்கத்திற்குப் பின்னர் பிரான்ஸ் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட சபாநாயகர், புயலுக்குப் பிந்தைய சூழ்நிலையையும், தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியால் எழும் சவால்களையும் அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ரீதியான உறவுகளை எடுத்துரைத்த சபாநாயகர், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பிரான்ஸ் முக்கிய சந்தையாகத் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் முறைப்பாடுகளைக் காண்காணிப்பதற்கான வலுவான திட்டங்கள் மூலம் வசதிவாய்ப்புக்களை அதிகரிக்கும் அதேநேரம், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை இலங்கை தொடர்ந்தும் உறுதிசெய்து வருவதாக அவர் தெரிவித்தார். எயார் பிரான்ஸ் நிறுவனத்துடனான தொடர்புகளை மேம்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையில் வான் வழியான இணைப்பை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு அடையாளம் காணப்பட்டது.

GSP+ சலுகை மூலம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டிய சபாநாயகர், மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நிலையான வர்த்தக வாய்ப்புகள் மூலம் இலங்கையின் தொழில்துறைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் அதிகரித்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இலங்கையில் தமக்கு வழங்கிய சிறப்பான உபசாரத்திற்கு பாராட்டைத் தெரிவித்த வலினா பௌலி ககன், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதில் பிரான்ஸ் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தமது இலங்கை விஜயத்தின் போது நடத்தவுள்ள சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நீர் சுத்திகரிப்புத் திட்டம், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் ஆடைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதில் காணப்படும் ஆர்வம் உள்ளிட்ட விடயங்களையும் இத்தூதுக் குழுவினர் வெளிப்படுத்தினர். பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மைகளைத் தொடர வேண்டும் என்ற தங்கள் நோக்கத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதேநேரம், பிரான்ஸ் தூதுக் குழுவினர் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தச் சந்திப்பிற்கு குறித்த சங்கத்தின் தலைவரும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சருமான சரோஜா போல்ராஜ் மற்றும் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் பொருளாதார ஈடுபாடு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் சமூகக் கொள்கை உள்ளிட்ட பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் பற்றி ஆராயப்பட்டது.

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கு பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைச்சர் போல்ராஜ் அவர்கள் நன்றி தெரிவித்தார். பாலின சமத்துவம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கொள்கைகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துரைத்ததோடு, இத்துறைகளில் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், முதலீடு, கல்வி, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் போன்ற முக்கியத் துறைகளில் பிரான்சுடனான உறவை வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மேலும் வலியுறுத்தியதோடு, இருதரப்பு மற்றும் உலகளாவிய மட்டங்களில் இந்தப் கூட்டாண்மையின் வலுவான ஆற்றலையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் லால் பிரேமநாத், ஹெக்டர் அப்புஹாமி, தனுர திசாநாயக்க மற்றும் தர்மபிரிய திசாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற மதியபோசன விருந்துபசாரத்திலும் பிரான்ஸ் தூதுக் குழுவினர் பங்கேற்றதுடன், பாராளுமன்றத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பெர்ட் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இந்தச் சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை