இன்று பாடசாலைகள் மீண்டும் திறப்பு

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்காக இன்று ஆரம்பமாகும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 30 […]
நிலக்கரி மோசடி; அமைச்சரின் பதவி விலகல் ஒரு நாடகம்

நிலக்கரி மோசடி தாெடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு உதவுவதற்கே வலுசக்தி அமைச்சர்பதவி விலகியதாக தெரிவிப்பது போலித்தனமான காரணமாகும். அத்துடன் நிலக்கரி கொள்வனவு பொறுப்பை அமைச்சரின் மீது மட்டும் சுமத்திவிட்டு, அரசாங்கம் முற்றாக ஒதுங்கிக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது என்பது, ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அந்த அமைச்சர் பொறுப்பேற்பதைக் குறிக்கிறது. இது […]
நீர்வேலியில் சாப்பாட்டுத் தகராறு: கணவன் மீது ஏற்பட்ட கோபத்தில் மனைவி உயிர்மாய்ப்பு
யாழில், தான் செய்த ரோல்ஸினை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த வினோத் வினிதா (வயது 28) என்ற, ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார். இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு […]
கீரிமலை கடலில் மூழ்கியவர் உயிரிழப்பு
ஆணொருவர் கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்தார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக வந்துள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார். இதன்போது தீடீரெ நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது […]
தடுப்புக்காவலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி

ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் கைவசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சியை 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைசரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி கைதுசெய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகள், அந்தப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியிடமிருந்து பெற்றுக்கொண்ட தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய, 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இந்நிலையிலேயே […]
வட கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் – இந்திய துணை ஜனாதிபதி

தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்று இந்திய துணை ஜனாதிபத சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் கரங்களைப் பற்றியவாறு குறிப்பிட்டுள்ளார். வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தங்களது அறிமுகத்துடன் சமகால நிலைமைகள் மற்றும் […]