லக்னோவைத் தோற்கடித்த பஞ்சாப்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), புதிய சண்டிஹாரில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: லக்னோ பஞ்சாப்: 254/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரியன்ஷ் ஆர்யா 93 (37), கூப்பர் கொனோலி 87 (46), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 29 (16), ஷஷாங்க் சிங் 17 (06), நெஹால் வதேரா 13 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறின்ஸ் யாதவ் 2/25 [4], மணிமாறன் சித்தார்த் […]
புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி 80 பேர் பலி!

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். அதிகளவிலான விபத்து மரணங்கள் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பதிவாகியுள்ளன. அதேவேளை, நீரில் மூழ்கிய சம்பவங்களினால் […]
போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர் கைது
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதி ஒருவரும் என தெரியவந்துள்ளது. இவர்கள் இந்த போதைப்பொருளை தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து, இந்தியாவின் பெங்களூரு நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 […]
அமெரிக்கா கப்பலை கைப்பற்றியதை தொடர்ந்து ஈரான் கடும் எச்சரிக்கை

ஓமன் வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதற்குத் தான் பதிலடி கொடுக்கப் போவதாக ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது. ஈரானின் அரசு ஒளிபரப்புச் சேவையான IRIB தனது டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, “ஆக்கிரமிப்பு அமெரிக்காவானது, போர்நிறுத்தத்தை மீறி, கடல்வழி வழிப்பறியில் ஈடுபட்டு, ஓமன் கடல் பகுதியில் ஈரானிய வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது” என்று ஈரான் இராணுவம் […]
அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: சட்டங்களை வலுப்படுத்த பெண்கள் விவகார அமைச்சு நடவடிக்கை

நாட்டில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் டாக்டர் நாமல் சுதர்ஷன நேற்று (19), பெண்களை வலுப்படுத்துவதற்காக தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் ஊடாக கொள்கைகளை வலுப்படுத்துவதில் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக […]
தரமற்ற நிலக்கரி இறக்குமதி; முன்னாள் அமைச்சர் மற்றும் செயலாளரை கைது செய்யக் கோரிக்கை

தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் நாட்டுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் 25 பில்லியன் ரூபாய் நஷ்டத்திற்குப் பொறுப்பான முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் பதவி விலகிய பின் தப்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் […]
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பலவீனமடைந்துவிட்டது! – பிரதமர் மார்க் கார்னி

பிரதமர் மார்க் கார்னி ஒட்டாவாவிலுள்ள தனது இல்லத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட சுமார் 10 நிமிட உரையை இன்று காலை வெளியிட்டார். டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையிலான அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு மத்தியில் கனடாவின் எதிர்காலப் பாதை குறித்து அவர் இதில் விளக்கினார். 1. அமெரிக்க உறவு குறித்த புதிய பார்வை அமெரிக்காவுடனான நெருக்கமான உறவு ஒரு காலத்தில் கனடாவின் பலமாக இருந்தது, ஆனால் இப்போது அதுவே ஒரு ‘பலவீனம்’ ஆக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “அமெரிக்கா தனது […]
இந்தியா – இலங்கை இடையே எரிபொருள் குழாய் இணைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளையும் இணைக்கும் எரிபொருள் குழாய் திட்ட முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய விக்ரம் மிஸ்ரி பின்வருமாறு தெரிவித்தார்: மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு) நிலவும் போர் பதற்றங்களால் உலகம் முழுவதும் […]
ஈரானிய அணுசக்தி உரிமையைப் பறிக்க ட்ரம்ப்பிற்கு அதிகாரமில்லை – ஈரான் ஜனாதிபதி மசூத்

ஈரானின் அணுசக்தி உரிமைகள் தொடர்பாக வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரானிய மாணவர் செய்தி முகமை (ISNA)க்கு வழங்கிய பேட்டியில், அமெரிக்காவின் அழுத்தங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். “ஈரான் தனது அணுசக்தி உரிமைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் எந்த அடிப்படையில் அவர் இதைச் சொல்கிறார் என்பது தெளிவாக இல்லை. […]
துப்பாக்கிச் சூட்டில் 8 சிறுவர்கள் பலி

லூசியானாவின் ஸ்ரீவ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஒரு குடும்பத் தகராறு என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 05:00 மணியளவில், ஒரு நபர் 10 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பியோடிய சந்தேக நபரைக் பொலிஸார் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.