மே தின நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்பு

இந்த வருட சர்வதேச தொழிலாளர் தின (மே தினம்) கொண்டாட்டங்களை மாவட்ட மட்டங்களில் நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (jvp) தீர்மானித்துள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டத் தலைவர்களின் தலைமையில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. விசேடமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பொதுமக்களுக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய மாவட்ட மட்டங்களில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதுடன் ஜே.வி.பி.யின் தலைவரும் ஜனாதிபதியுமான […]
பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல்- லசந்த அழகியவண்ண

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், “சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. ஆனால், அரசாங்கம் இதனை ஒரு சுயாதீன விசாரணைக்கான […]
ஜனாதிபதி வேட்பாளராக நாமல்; இரகசிய தகவல் வெளியானது!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த பல கட்சிகளின் கூட்டணியில் நாமல் ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக்க தெரிவித்துள்ளார். தரமற்ற நிலக்கரியால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர் இன்று உலகில் அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடாக நாம் மாறியுள்ளோம். அந்த எரிபொருளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படப்போகிறது. இந்த டிசலில் மின்னுற்பத்தி செய்வதற்கு ஒரு நாளைக்கு 4500 […]