பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முன்வர வேண்டும்

தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு […]

ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு!

சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக வழக்கறிஞர் கலாநிதி கு. குருபரன் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் ‘கொழும்பு டெலிகிராப்’ பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதியிருந்த ரட்ணஜீவன் கூல், போலியான உறுதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் வழக்கறிஞர்களைக் காப்பாற்றும் நோக்கில் கலாநிதி கு. குருபரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினர், அப்போதைய சிறிலங்காவின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து, குறித்த வழக்கறிஞர்களைக் காப்பாற்றி விடுமாறு […]

ஈரானின் யுரேனியத்தை கைப்பற்ற டிரம்ப் தீவிர ஆலோசனை – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல்

ஈரானிடமிருந்து சுமார் 1,000 பவுண்டுகள் அளவிலான யுரேனியத்தை (Uranium) கைப்பற்றுவதற்கான ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவ நடவடிக்கை: இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் நுழைந்து பல நாட்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோக்கம்: ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது […]

திரு தேவதாஸ் நாகராஜா (தேவன்)

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bois-Herpin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு தேவதாஸ் நாகராஜா (தேவன்) அவர்கள் 18-03-2026 அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், நாகராஜா தேவராணி தம்பதிகளின் அன்பு மகனும், யோககுமார் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், ஸ்ரீதர்ஷினி தேவதாஸ் அவர்களின் அன்புக் கணவரும், ஹரிஸ்ழன், விதுஸ்ழன், நிரூஸ்ழன், ஐதுஸ்ழன், திரூஸ்ழன், லேயா(Lea), இராதுஸ்ழன், இனியா ஆகியோரின் அன்புத் தந்தையும், நவதாஸ் குடும்பம், சுதா குடும்பம், சந்திரராஜா கிரிஜா குடும்பம் […]

அரசுக்கு எதிரான ஒரு பாரிய போராட்டம் – வடமாகாண கடற்தொழிலாளர் சங்கங்கள்

வடமாகாண கடற்தொழிலாளர்களின் விவகாரத்தில் அரசாங்கம் காட்டிவரும் மெத்தனப் போக்கைக் கண்டித்து, அரசுக்கு எதிரான ஒரு பாரிய மக்கள் போராட்டத்தை விரைவில் நடத்தவுள்ளதாகக் கடற்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கலந்துரையாடல்: தற்காலத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக தந்தை செல்வா அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. சங்கங்கள் கூட்டாக நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சார்பில் கலந்துகொண்டிருந்த என்.எம்.ஆலம் மேலும் […]

இன்றும் வெப்பமான வானிலை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி […]

ஆசிரியர்களின் இடமாற்ற விவகாரம்; விசாரணைக்கு அழைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

வட மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பாகஇ பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் திங்கட்கிழமை விசாரணைக்கு வருமாறு மூன்று அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள்: வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர். மாகாண கல்விப் பணிப்பாளர். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர். இந்த இடமாற்றங்கள் “சேவையின் தேவை கருதி” வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதில் […]

கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் கட்டுத்துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ரி.அபேரட்னவின் தலைமையில் சென்ற பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். 38 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக மக்களை பற்றி தரக்குறைவாக பேசியமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் மக்கள் பிரதிநிதியாகப் பார்க்கவில்லை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம். இந்த ஊடக சந்திப்பு அந்த மனநோயாளிக்கானது அல்ல, யாழ் மக்களுக்கானது என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் உப தலைவருமான ஆர். ராஜாராம் தெரிவித்தார். மலையக மக்கள் தொடர்பாக அவதூறான காணொளி ஒன்றினை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்து, நேற்று (29) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் […]

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்து

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் […]