வடக்கில் இன்று உச்சபட்ச வெப்பநிலை!

இலங்கையின் வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வெப்பச் சுட்டெண் (Heat Index) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகமிருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளின் போது அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வானிலை தொடர்பான மேலதிக விபரங்களைத் தெரிவித்துள்ள திணைக்களம், எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவக்கூடிய காலநிலை மாற்றங்கள் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: ஏப்ரல் மாதம் முழுவதும் […]

பொலிஸார் மீது தாக்குதல்: அச்சுவேலியில் ஏழு பேர் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்ய முயன்ற போது, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. : இத்தாக்குதல் தொடர்பாக நேற்று மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 27ம் திகதி அச்சுவேலி பகுதியில் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்ய […]

காணாமல்போன வயோதிபப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகதேவன் சிவஞானம் என்ற 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு […]

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (30.03.2026) தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,511.85 டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,493.79 டொலராக பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை 70.33 டொலர்களாக பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (30.03.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 358800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 […]

நீர்கொழும்பில் சினிமாப் பாணியில் கொள்ளை

நீர்கொழும்பில் சினிமாப் பாணியில் வீட்டுக்குள் நுழைந்த இளம் தம்பதி, பெண் ஒருவரை தாக்கிய நிலையில் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 91 வயது மூதாட்டியின் வாயைத் துணியால் கட்டி, அவரிடமிருந்து 45,000 ரூபாய் மதிப்புள்ள தங்க காதணிகளை திருடிய தம்பதியை, கட்டான பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள், நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனை அருகே கடந்த 26 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டில் […]

சிவனொளிபாதமலைக்குத் தரிசனம் செய்ய சென்றவர் உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்குத் தரிசனம் செய்ய வந்த யாத்திரிகர் ஒருவர், மலை ஏறும் வழியில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று(29.03.2026) முற்பகல் 11:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது உறவினர்களுடன் சிவனொளிபாதமலைக்குத் தரிசனம் செய்ய வந்த இவர், கங்குலதென்ன பகுதியில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென சுகவீனமடைந்துள்ளார். இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸாரின் உதவியுடன் அவர் உடனடியாக நல்லதண்ணி நகருக்குத் […]

இலஞ்சம் வாங்கிய வருமான வரிப் பரிசோதகர் கைது!

மொனராகலை பிரதேச சபையில் கடமையாற்றும் வருமான வரிப் பரிசோதகர் ஒருவர், 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்தல்களை புலனாய்வு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று(29.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ விடயம் ஒன்றைச் சாதகமாகச் செய்து கொடுப்பதற்காக, மேற்படி அதிகாரி 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் […]

மட்டு.அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தியமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் […]

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

மண்டபம் வடக்கு கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்த குடோன் ஒன்றில் பதுக்கி வைப்பதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா, சமையல் மஞ்சள், ஏலக்காய், நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட கடத்தல் பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்துள்ளதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பிடித்து மரைன் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை […]

நீருக்கடியில் இயங்கிய சட்டவிரோத மதுபான நிலையம் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (29) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 8 பீப்பாய்களில் இருந்த 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டதுடன், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி […]