ஈரானின் தாக்குதல்களால் 3 பில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ சொத்துகள் சேதம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டொலர் முதல் 2.9 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் […]
2 எரிவாயு கப்பல்கள் இந்தியா செல்ல ஈரான் அனுமதி

மேலும் 2 எரிவாயு (எல்.பி.ஜி) கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியது. கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 5 இல் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. இதை ஈரான் மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா, ரஷ்யா, சீனா, […]
பாணந்துறையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
பாணந்துறை – பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பிங்வத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், சந்தேகநபரால் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே உயிரிழந்தமைக்கு […]
இன்று முதல் நெடுந்தாரகை படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, நெடுந்தீவுக்கான படகுச் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த சனிக்கிழமை ‘நெடுந்தாரகை’ படகினை வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகே நேரில் சென்று பார்வையிட்டு, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் இந்தப் படகு இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையில் ஈடுபடவுள்ளது. ‘நெடுந்தாரகை’ படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக நல்லூரில் நாளை பாரிய போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள்இதுஷ்பிரயோகங்கள் மற்றும் திட்டமிட்டுப் பரப்பப்படும் போதைப்பொருள் கலாசாரத்திற்கு எதிராக நாளை (மார்ச் 31) நல்லூர் கந்தசுவாமி கோவில் வீதி சங்கிலியன் பூங்காவிற்கு அருகில்.கண்டனப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச தரத்திலான நீதியைப் கொடுக்கவேண்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் விநியோகத்தை முற்றுமுழுதாகத் தடுத்தல். பெண்களினதும் சிறுவர்களினதும் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துதல்.ஆகிய நோக்கங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகள் […]
இன்று மின் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று(30) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டுக்காக அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக அதிகளவில் டீசலைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளமை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. […]
விபத்தில் 7 வயது சிறுவன் மரணம்
தனமல்வில – வெல்லவாய வீதியில், குடாஓய நகருக்கு அருகில் நேற்றுமுன்தினம்(28) இடம்பெற்ற கோர விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். வெல்லவாயவிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, எதிர்த் திசையில் வந்த முச்சக்கர வண்டி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த சிறுவன் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். காயமடைந்த சிறுவன் உடனடியாக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். […]
மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய மோசடி முறியடிப்பு

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் போலியான முறையில் பயன்படுத்தி, மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயலொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த 26ஆம் திகதி இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த நிறுவனம் நீண்டகாலமாக இவ்வாறான பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்தமை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கண்டறியப்பட்டுள்ளது. மாவனல்லை – ஹிங்குல பகுதியில் இயங்கி வந்த நிறுவனமொன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், […]
இலங்கைக்கு பல்வேறு கோணங்களில் கடுமையான தாக்கங்கள் – சஜித்
தற்போது மத்திய கிழக்கு யுத்தம் தீவிரமடைந்து, யேமனின் வடமேற்கு பகுதியையும் சனா நகரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி அமைப்பினர் மத்திய கிழக்கு போரில் புதிதாக நேரடியாக தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு பல்வேறு கோணங்களில் கடுமையான தாக்கங்கள் நேரடியாக ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று(29) விசேட உரையொன்றினை முன்வைத்து தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், பாப் அல் மந்தாப் நீரிணை வழியில் ஹூதி அமைப்பினர் போர் களத்திற்கு வருவதால் பல தாக்கங்கள் நமது […]
இலங்கை உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்?

மத்திய கிழக்கிலுள்ள ஹோர்முஸ்நீரிணை மூடப்பட்டால், அதனால் உலகில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘கீல் உலகப் பொருளாதார நிறுவனம்’ (Kiel Institute for the World Economy) 2026 மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முக்கிய விபரங்கள்: விலையேற்றம்: ஹோர்முஸ்நீரிணை முழுமையாக மூடப்பட்டால், இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை 15% க்கும் அதிகமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உணவு விலையேற்றத்தை எதிர்கொள்ளும் இரண்டாவது நாடாக இலங்கை […]