திரு மகேந்திரா சண்முகராசா

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு மகேந்திரா சண்முகராசா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைனவடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராசா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகிர்தாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும், வைஷ்ணவன்(கனடா), லக்ஷ்மன்(கனடா), தீபிகா(கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மீரா, சோபனா, நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்புச் சகோதரரும், கீதாஞ்சலி, அரவிந்தன், […]
தமிழக மீனவர்கள் இருவரை விடுவித்தது இலங்கை

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற வரப்பிரசாதம் என்பவரது விசைப்படகையும், படகிலிருந்த கம்ன்ஸ்டன் ராஜ், மினிட்டோ ராயப்பன் ஆகிய 2 மீனவர்களையும் தலை மன்னார் அருகே இலங்கை கடற்படையினர் கடந்த மார்ச் 5 அன்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று கிளி நொச்சி நீதிமன்ற நீதிபதி, மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனைவிதித்துவிடுதலை செய்து உத்தரவிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதனைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பெற்றுக் கொண்டார். […]
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை – கமல்ஹாசன்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “முதல்வரும், துணை முதல்வரும் மிகவும் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். நாட்டுக்கான முக்கியமான போராட்டம் இது. இந்த ஆட்சி தொடர வெண்டும் என்பதே என் விருப்பம், என் முடிவு. எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை. தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டேன். அரசியல் […]
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து மோடி – ட்ரம்ப் கலந்துரையாடல்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ உரையாடல் இதுவெனக் கருதப்படுகிறது. இது தொடர்பான தகவல்களைப் பிரதமர் மோடியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோரும் தமது […]
நாட்டின் உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்கு இணக்கம்

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன. விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உர நிறுவனங்கள் இதனைத் தெரிவித்தன. மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும், இம்முறை சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய […]
புளியங்கூடலைச் சேர்ந்த பெண் பாதசாரி கடவையில் வாகனம் மோதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல் பகுதியை சேர்ந்த 70 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 18 ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்றையதினம் அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர். இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக […]
யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை – அருண் சித்தார்த்

யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார். நேற்று முன்தினம் (23) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த இலங்கை தேசிய கொடியை இறக்கி கருப்பு கொடி ஏற்றிய காரணத்துக்காக விசாரணைக்கு அந்த மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதன் […]
போதைப்பொருள் வர்த்தகம் செய்த பெண்ணின்; சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்ட வருமானத்தில் இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது அதற்கமைய கொழும்பு -14 மற்றும் ஜா-எல பகுதிகளில் அமைந்துள்ள 514 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணி, 4 கடை அறைகள், மூன்று மாடி வீடு மற்றும் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய […]
இயற்கை எரிவாயு; ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனம்?

இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான தமது நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தங்கள் சிலவற்றில் போர்ஸ் மேஜர் எனப்படும் ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போரினால் ஏற்பட்டுள்ள உற்பத்தி மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர்ஸ் மேஜர் என்பது எதிர்பார்க்க முடியாத அசாதாரண நிகழ்வுகளின் போது, ஒரு தரப்பினர் தமது ஒப்பந்தக் கடமைகளில் இருந்து […]