மத்திய கிழக்கு நிலவரம் அநுரவுக்கும் – மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் தமது எக்‌ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய […]

நலன்புரித் திட்ட முதியோர் கொடுப்பனவுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இக்கொடுப்பனவுகள் நாளை 26ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைகள் […]

மோசமான காட்டுத்தீ அபாயங்களை ஐரோப்பா சந்திக்கிறது – ஐ.நா

ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான காட்டுத்தீ அபாயங்களைச் சந்தித்து வருவதாகவும், ஆனால் அத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்ள அந்த நாடுகள் இன்னும் “தயார் நிலையில் இல்லை” என்றும் புதிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவின் தெற்குப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதால், காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 2026ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பாவில் […]

போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 82 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்

ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அமைப்பான அதன் தலைவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தம் 281 வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.