சுவிஸ் தூதுவருடன் இளைஞர் விவகார அமைச்சர் விசேட சந்திப்பு

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Dr. Siri Walt) மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (24) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் இளைஞர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இளைஞர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. […]

மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடும் வெப்பநிலை

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ், சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது. இதுவே தற்போதைய கடும் வெப்ப நிலைக்கு முக்கிய காரணமாகும். பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ […]

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட தம்பதியினரின் உடல் எச்சங்கள்!

கோவிட் காலத்தில் (ஆறு ஆண்டுகளுக்கு முன்பு) காணாமல் போன தம்பதியினரின் உடல்கள், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிபிட்டிய வத்தை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்கள் 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் காமந்த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 2020 ஆம் ஆண்டு காணாமல் போனதாக அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் ஜனாதிபதி செயலகத்திடம் மேன்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த […]

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி முக்கிய ஆலோசனை

செம்மணி மனித புதைகுழி அகழ்வு குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். ஐ.நாவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி இது குறித்து சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் துறைக்கு விஜயம் செய்து, செல்லையா பிரணவன் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கப்படவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி (Chemmani exhumation) அகழ்வுப் பணிகள், பொதுப் புதைகுழிகள் தொடர்பான நடைமுறைகள் மற்றும் இந்தச் செயல்முறையை சுதந்திரமான முறையிலும் வெளிப்படையான முறையிலும் […]

மத்தல விமான நிலையத்தை வளைகுடா விமான நிறுவனங்கள் மாற்று போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தத் திட்டம்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) ஒரு மாற்றுப் போக்குவரத்து மையமாகப் (Alternative Transit Hub) பயன்படுத்துவது குறித்து, பெரிய வளைகுடா விமான நிறுவனங்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, அடுத்த வாரம் அங்கு ஒரு முக்கியமான கள விஜயம் (Field Visit) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, […]

ஈரானில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கையிடம் கப்பல்கள் இல்லை!

இலங்கைக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாக ஈரான் விடுத்த அழைப்பைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சொந்தமாகக் கப்பல்களைக் கொண்ட நாடுகளே இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், இலங்கையிடம் அத்தகைய வசதி இல்லை என்றும் நேற்று தெரிவித்தார். இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக அந்த நாட்டுத் தூதுவர் தெரிவித்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு […]

மசகு எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 […]

இலங்கையின் தற்போதைய நாணய கொள்கையில் மாற்றமில்லை

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவில் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மிக மிக விரைவாக போதைப் பொருளை அழிக்க எதிர்பார்க்கிறோம்!

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அழிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். இதற்காக முறையான பொறிமுறையொன்றை உடனடியாகத் […]

தொடரும் போர்; எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பெரும் பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை ரத்து செய்ததற்காக ஜெட்ஸ்டார் நியூசிலாந்து மன்னிப்பு கோரியுள்ளது. மே மாதத்தில் 12% விமானங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணங்கள் இதில் அடங்கும். பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணிகளுக்கு அதே நாளில் மாற்று விமானங்கள் […]