நாட்டின் பொது திறைசேரியை சூறையாடி தமது அரசியல் தலைமையகத்தை நிரப்புகிறது அரசாங்கம்

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொது திறைசேரியை சூறையாடிக்கொண்டு, தமது அரசியல் தலைமையகமான பெலவத்தையின் கணக்குகளை நிரப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள கடுமையாக விமர்சித்துள்ளார். புதன்கிழமை (25) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் பொய்களையும் பயன்படுத்தி, அந்தப் பழிபாவங்களை மக்கள் மீது சுமத்திவிட்டு தீர்வின்றி தவிக்க விடுவதையே வழக்கமாகக் […]
தடுப்புக் காவலில் இருந்த சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பில் நீதவானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவர் செவ்வாய்க்கிழமை (24) அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் முன்னெடுக்கப்பட்ட […]
சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய போதைப்பொருள் குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். திருகோணமலையில்இன்று புதன்கிழமை (25) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்தச் சுற்றிவளைப்புகள் தொடர்பான மேலதிக விபரங்களையும் வெளியிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் பதுங்கியிருந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று […]
948 ட்ரோன்களால் 24 மணித்தியாலங்களில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு உக்ரேனின் இவானோ-பிராங்க்விஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நகரின் முக்கிய மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் மகப்பேற்று நிலையம் பலத்த சேதமடைந்துள்ளன. தாக்குதலின் போது இரு பெண்கள் நிலத்தடி அறையில் குழந்தையைப் பெற்றெடுத்த போதிலும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி […]
சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு கடிதம்!

இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் இஸ்ரேல் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சினால் கடந்த 23 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான இஸ்ரேலிய பிரதிப் பணிப்பாளர் நாயகம் நினா பென்-அமி விடுத்துள்ள இக்கடிதத்தில், ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன: ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் […]
தனியார் காணியொன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு
மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர். சிசுவின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிசு உயிரிழந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிசுவின் பெற்றோர் யார்?, எதற்காக சிசு கைவிடப்பட்டது என்பதைக் கண்டறிய மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக […]
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இருவர் இன்று புதன்கிழமை (25) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து இன்று அதிகாலை 3.15 மணிக்கு வருகை தந்த விமானம் மூலம் இந்த இரு சந்தேகநபர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக செல்ல முயன்றபோதே அவர்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் […]
உருவாக்க நிலை செயற்கை நுண்ணறிவால் பெண்கள் அதிகம் பாதிப்பு?

உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து அபாயத்தை எதிர்கொன்கின்றனர் என்பதை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தரவுகள் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக தானியக்கம் சார்ந்த பணிகளில் அதிகளவில் ஈடுபடுவதாலும் தொழிநுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாலுமே பெண்கள் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்வதாக புதியதொரு அறிக்கை குறிப்பிடுகிறது. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவானது (Generative Artificial Intelligence / GenAI) வேலை உலகை மறுவடிமைத்து வருகிறது. இந்த செயன்முறையானது உற்பத்தித் திறன்களை […]
மலைப்பாம்புடன் அழகிப் போட்டியில் நடனமாடிய இளம் பெண்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில், பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மார்ச் மாதம் 20ஆம் திகதி கொழும்பு ராயல் மாஸ் எரீனா வளாகத்தில் பிரபல ஒப்பனை கலைஞர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட “CJ Royal New Year Prince & Princess – 2026” அழகிப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]
சுகாதாரத் தொழிலாளி பொத்துவில் முதல் கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவனி

பிரதேச சபை செயலாளரின் மனித நேயக் கவனத்துக்கு கொண்டுவரப்படவேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9வது மாதங்களில் தனக்கான ஊதியம் வழங்கப்படாமை மனித உரிமைமீறலாகும் என சுகாதாரத் தொழிலாளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு ஏற்பட்ட நிலைமையால், தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் “நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொத்துவில் பகுதியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவனியில் ஈடுபட்டார். மேலும், […]