அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக பேரணி

தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக, எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று(24.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இம்முறை மே மாதம் முதலாம் திகதி வெசாக் தினமாக அமைவதனால், ஸ்ரீலங்கா பொதுஜன […]

கோழி இறைச்சி, முட்டை விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எரிபொருள் விலை உயர்வால், ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும், தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாயிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய முட்டையின் விலை 37 ரூபாயாகவும், நடுத்தர முட்டையின் விலை 39 ரூபாயாகவும் பெரிய (சிவப்பு) முட்டையின் விலை 41 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு ஆகியவை கோழி வளர்ப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக பாதித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். […]

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதிக்குள் கொண்டு வரப்பட்ட யானைகளால் மக்கள் அவதி

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதிக்கு யானைகளை திட்டமிட்டு கொண்டுவந்து விட்டுள்ளனர் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவற்றை எவரும் பார்வையிடவில்லை எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேவில் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் முப்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்துள்ளன எனவும் இது குறித்து நாங்கள் உரியவர்களுக்கு முறையிட்டோம் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். யானைகள் நடமாடிய பகுதியிலிருந்து 50 மீற்றர் தொலைவில் இராணுவமுகாம் உள்ளதாகவும் […]

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் வேல்நம்பி

உயர்பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிப தியாக விளங்கிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி திருநாவுக்கரசு வேல்நம்பி (B.Com, M.A. யாழ்ப்பாணம் M., Ph.D சென்னை) இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 12 ஆவது துணைவேந்தராகப் பதவி ஏற்றார். பேராசிரியர் வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் B.Com பட்டப்படிப்பை கற்று முடித்து பின் வர்த்தகத்துறையில் உதவி விரிவுரையாளராக இணைந்து பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்று சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியராக விளங்குகிறார். அவர் தனது சேவைக்காலத்தில் வணிகத்துறைத் தலைவராகவும், மூன்று முறை முகாமைத்துவ – […]

திரு ராஜ்சுதன் செல்வராஜா

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு ராஜ்சுதன் செல்வராஜா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற தியாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும், மதுஷா, கபிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராஜ்மொகன்(அவுஸ்திரேலியா), ராஜ்ரூபன்(கனடா), யசோதா(இலங்கை), ராஜ்வரதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், உதயகுமார்(இலங்கை), அனுசியா(அவுஸ்திரேலியா), கல்பனா(கனடா), ரோகினி(பிரித்தானியா), சுகந்தி(பிரான்ஸ்), கவிதா(இலங்கை), சுதர்சன்(இலங்கை), நிதர்சன்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), […]

தோல்வியுற்ற கொள்கைகளால் பாதிக்கப்பட்ட கனடா – பிரம்ப்டன் நகர வாகனத் துறையை மீட்க கன்சர்வேட்டிவ் கட்சி புதுத்திட்டம் வகுப்பு!

லிபரல் கட்சியின் தோல்வியுற்ற கொள்கைகள் கனடாவின் வாகனத் துறையை பெருமளவில் பாதித்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டு முதல், கனடாவின் வாகன உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளதுடன், நாடு முழுவதும் 5,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் பிராம்ப்டன் நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு ஏற்கனவே 3,000 வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. உற்பத்தியை இரட்டிப்பாக்கவும், வேலைவாய்ப்புகளை மீண்டும் தாயகத்திற்குக் கொண்டு வரவும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஒரு திட்டத்தை வகுத்துள்ளனர். அவை பின்வருமாறு கனடாவில் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்கள் […]

ஈரானின் புதிய உச்ச தலைவர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறார் – இஸ்ரேலிய ஊடகம் செய்தி

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறார் என இஸ்ரேலிய ஊடகமான யெடியோத் அஹ்ரோனூத்தை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கும், அமெரிக்கா மீடியேட்டர் ஸ்டீவ் விட்காஃபுக்கும் இடையே நடந்த இரு தரப்புக்கான பேச்சுவார்த்தை குறித்த உரையாடலுக்கு, ஈரானின் உச்ச தலைமை ஒப்புதல் அளித்துள்ளது என்று அஹ்ரோனூத் ஊடக செய்தியை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஈரான் […]

‘விரும்பத் தகாத நபர்’; லெபனானுக்கான ஈரான் தூதுவரை வெளியேறுமாறு உத்தரவு

லெபனானுக்கான ஈரான் தூதுவரை ‘விரும்பத் தகாத நபர்’ என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெறிமுறைகள் மற்றும் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை ஈரான் தூதுவர் மீறியுள்ளார் என லெபனான் வெளியுறவு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. தெஹ்ரானின் இத்தகைய செயல்பாடுகள் இருதரப்பு உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், லெபனான் […]

எரிபொருள் சட்டவிரோத விற்பனை; பவுசருடன் ஒருவர் கைது

பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பவுசர் ஒன்றையும் அதிகளவிலான எரிபொருளையும் தன்வசம் வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் வலனை ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மொரகஹஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 6,752 லீற்றர் டீசல் பெட்ரோல் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. வலனை ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்கவுக்குக் கிடைத்த […]

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாடாக இவ்வாறு செயல்படுவதன் மூலம், பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரச நிறுவனங்களின் தலைவர்கள், தங்களிடம் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இருந்தால், பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி முறைகள் மூலம் சேவைகளைப் பெற நடவடிக்கை எடுக்க […]