யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம் எந்த முகாமைத்துவமும் இல்லாமையே நெருக்கடிக்கு காரணமாகும். அதனால் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறினால் நீண்டகாலம் செல்ல முன்னர் மக்கள் வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சந்தி்பாென்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு […]

யாழ்.பல்கலை நிர்வாகப் பணிகளில் இருந்து விடைபெற்றார் சற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்றுடன் விடை பெற்று சென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஓகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஓகஸ்ட் முதல் நேற்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா […]

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் தொடக்கத்தில், மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் முன்னுரிமைத் தேவைகளை ஆளுநர் விளக்கினார். பொருளாதார மேம்பாடு, காணிப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், மற்றும் நெகிழ்வுத்திறன் கொண்ட வாழ்வாதாரங்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகளின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களைப் […]

பொதுச் சேவையில் இணைந்துள்ளவர்கள் மிகவும் நேர்மையான முறையில் சேவையாற்ற முன்வர வேண்டும் – வட மாகாண ஆளுநர்

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் […]

கனிமொழி ஆளுமையுள்ள பெண் அவருக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? – சீமான்

“கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கனிமொழி மாநில அரசியலில் வருவதற்கும் அவர்கள் வெற்றிபெறுவதையும் யார் எதிர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு […]

திரு மகேந்திரா சண்முகராசா

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு மகேந்திரா சண்முகராசா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைனவடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராசா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகிர்தாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும், வைஷ்ணவன்(கனடா), லக்ஷ்மன்(கனடா), தீபிகா(கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மீரா, சோபனா, நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்புச் சகோதரரும், கீதாஞ்சலி, அரவிந்தன், […]

தமிழக மீனவர்கள் இருவரை விடுவித்தது இலங்கை

ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்குச் சென்ற வரப்பிர​சாதம் என்​பவரது விசைப்​படகையும், படகி​லிருந்த கம்ன்​ஸ்​டன் ராஜ், மினிட்டோ ராயப்பன் ஆகிய 2 மீனவர்​களை​யும் தலை மன்​னார் அருகே இலங்கை கடற்​படை​யினர் கடந்த மார்ச் 5 அன்று கைது செய்து நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று கிளி நொச்சி நீதி​மன்​ற நீதிப​தி, மீண்​டும் இலங்கை எல்​லைக்​குள் மீன் பிடித்​தால் அபராதம் மற்​றும் சிறை தண்​டனை அனுபவிக்க வேண்​டும் என்ற நிபந்​தனைவிதித்துவிடு​தலை செய்து உத்​தர​விட்​டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​களாக அளித்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதனைக் கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.முனு​சாமி பெற்​றுக் கொண்​டார். […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை – கமல்ஹாசன்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “முதல்வரும், துணை முதல்வரும் மிகவும் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். நாட்டுக்கான முக்கியமான போராட்டம் இது. இந்த ஆட்சி தொடர வெண்டும் என்பதே என் விருப்பம், என் முடிவு. எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை. தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டேன். அரசியல் […]

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து மோடி – ட்ரம்ப் கலந்துரையாடல்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ உரையாடல் இதுவெனக் கருதப்படுகிறது. இது தொடர்பான தகவல்களைப் பிரதமர் மோடியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோரும் தமது […]