நகைச்சுவை நடிகரான முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டார்ம்’

தமிழ் திரையுலகின் சிறந்த நகைச்சுவை நடிகரான முனீஸ்காந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முனீஸ்காந்த் ,ஷாலினி, காசி தங்கம், சபரீஷ் ,சாம் ஜான், அருண் கார்த்திக் ,நிகில் நாயர் ,வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து ,பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் விஷால் இசையமைக்கிறார். ஃபீல் […]
கருப்பு படத்திற்காக இணைந்த சிலம்பரசன்- சாய் அபயங்கர்- ஆர். ஜே பாலாஜி

தமிழ் சினிமாவின் நிகரற்ற வசூல் நாயகனான சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘கருப்பு ‘ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க நாலு பேரு..’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு ‘ திரைப்படத்தில் சூர்யா ,திரிஷா , இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, […]
கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி 2 மாதங்களின் பின் உயிரிழப்பு!

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், தீயில் படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று, வீடு திரும்பி, இரண்டு மாதங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் திகதி இந்தப் பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் […]
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜயதிஸ்ஸ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் (intergovernmental agreements) மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ரஷ்ய எரிசக்தி […]
பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் ; சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை

மட்டக்களப்பில் பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 4 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 20-ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பின்னர் அவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லியடி வயல் பிரதேச கிணறு ஒன்றினுள் வீசப்பட்டிருந்தார். இதே கிணற்றிலிருந்து ஏற்கனவே காணாமல் போனதாக கருதப்பட்ட மற்றொரு பெண்ணின் […]
நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றவர் கைது

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். மருந்தக உரிமையாளர் இளைஞர்களைக் குறிவைத்து, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் […]
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இளம் வயதிலேயே […]
தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏயர் கனடா விமான விபத்தில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில், விமான பணிப்பெண் ஒருவர் தனது இருக்கையோடு 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டும் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. மாண்ட்ரியலில் இருந்து 72 பயணிகளுடன் வந்த அந்த விமானம், ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமான […]
திருடப்பட்ட 8 வாகனங்கள் கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையால் மீட்பு!

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையானது கடந்த நாட்களில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட வன்முறை கார் பறிப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் எட்டு திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. குறிப்பாக பீல் பிராந்திய காவல்துறை, டொராண்டோகாவல்துறை, ஒன்டாரியோ மாகாண காவல்துறை மற்றும் கனடா எல்லை சேவை நிறுவனம் (Agence des services frontaliers du Canada) ஆகியவற்றின் உதவியுடன் மேற்படி செயற்பாட்டை பீல் பிராந்திய காவல்துறை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் […]
புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நாளை பதவியேற்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார் . பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து முற்பகல் 9.30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.