யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் (SLTDA) உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்து இயங்கிவரும் சுற்றுலா சேவை வழங்கும் பங்குதாரர்களுக்கு மட்டுமே இந்த விசேட எரிபொருள் விநியோகம் வழங்கப்படவுள்ளது. தற்போதைய பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிச் சூழலிலும், நாட்டின் முக்கிய வருமான ஈட்டும் துறையான சுற்றுலாத்துறையை […]

மன்னார் மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக ஐ.நா. பிரதிநிதியிடம் முறையீடு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச் செயற்பாட்டாளருமான ஜாட்சன் பிகிராடோவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (23) மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியின் வட மாகாண விஜயத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் IOM அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் பிரதான நுழைவாயிலான மன்னார் பாலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி குறித்து […]

ஹார்முஸ் ஜலசந்தி ஊடகப் பயணிக்கும் கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான் மீதான தடையை ஒரு மாத காலத்துக்கு அமெரிக்கா நீக்கியது. தற்போது நட்பு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதிக்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.18.8 கோடி வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் கப்பல்களுக்கு […]

எரிசக்தி நெருக்கடிக்கு; திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து ‘த இந்து’ நாளிதழுக்கு விசேட கருத்துத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இரண்டாம் உலகப் போர் காலத்து எண்ணெய் சேமிப்பு வசதிகளை மீளமைப்பதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோக சவால்களுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி […]

‘மலையகம் அரசியல் அரங்கம்’ 5 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டம்

மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான அரச சேவைகள் மக்களைச் சென்றடையாமைக்குத் தீர்வு காணும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் முறையான நிர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் தொடர் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க ‘மலையகம் அரசியல் அரங்கம்’ தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை மலையகம் அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார். மலையகம் அரசியல் அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக ஆர்வலர் நல்லக்கண்ணு […]

மாற்று விமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் இலங்கையின் மத்தல விமான நிலையம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், மத்தல சர்வதேச விமான நிலையத்தைத் தரையிறக்கக் கட்டணமின்றிப் பயன்படுத்துவதற்குப் பல விமான நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, எமிரேட்ஸ் (Emirates), கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த ஏனைய விமான நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. அதிகரித்து வரும் தேவையைக் கருத்திற்கொண்டு, டர்கிஷ் ஏர்வேஸ் (Turkish Airlines) நிறுவனம் […]

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனாதிபதி செயலகத்தில் மனு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (Sri Lanka Cricket) தலைவர் உடனடியாக பதவிலக வேண்டும் என வலியுறுத்தி, ஒரு குழுவினர் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று மனு ஒன்றை கையளித்தனர். இணையவழியில் ஆயிரக்கணக்கானோரின் கையொப்பங்களைப் பெற்றுள்ள இந்த மனு, நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோருகிறது. கடந்த சில வாரங்களாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி […]

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் கடலில் உள்ள தொங்கா (Tonga) அருகே செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் உள்ள நாடுகள் சுனாமி அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. நியூசிலாந்தின் தேசிய அவசரக்கால மேலாண்மை நிறுவனம் (National Emergency Management Agency), இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தைப் பாதிக்கக்கூடிய சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பதை மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. “இந்த இடத்தில் சுனாமி உருவானால், அது நியூசிலாந்தை வந்தடைய குறைந்தது […]

இலங்கையில் வன்முறைகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் நீதித்துறையினருக்கு ஆபத்து – ரணில் சஜித் நாமல் சர்வதேச அமைப்புகளுக்கு கூட்டாகக் கடிதம்

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ள சூழலில், சட்டத்தரணிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரித்து, இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகள் பல சர்வதேச சட்ட ரீதியான தொழில்முறை அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளன. கடந்த ஆண்டில் 60-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன என்றும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அந்தக் கடிதம், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் ஒரு தொடர்ச்சியான போக்காக மாறியுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, பிப்ரவரி […]

பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள்!

கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது: ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும். பயணம்: […]