ஐ.பி.எல் செல்ல மலிங்கவுக்கு அனுமதி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான நுவான் துஷார, மதீஷ பத்திரண மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் கிரிக்கெட் சபையின் தடையில்லாச் சான்றிதழை இன்னும் பெறவில்லை. மலிங்க தவிர கமிந்து மென்டிஸ், பதும் நிஸங்க, துஷ்மந்த சமீர, தசுன் ஷானக ஆகியோரும் ஏற்கெனவே ஐ.பி.எல்லில் இணைவதற்கு தடையில்லாச் சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும்?

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இதனால் அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் எப்படியாவது ஈரானிடம் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று முயன்று வருகிறார். இதனிடையே ஈரானின் புதிய அதியுயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஒப்புக்கொண்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ‘அல் […]

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த தனது விசேட அறையை மக்களுக்காக வழங்கிய ஜனாதிபதி

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக மாத்திரம் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறை, செவ்வாய்க்கிழமை (24) முதல் பொதுமக்களின் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன. ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, 1000 கட்டில்களைக் கொண்ட வசதியுடன் […]

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகிவிட்டது!

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்கள் சமூகம் கஷ்டப்பட்டு வாழும் இந்த தருணத்தில் நாட்டில் நடப்பவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அநுர Fail மக்களை தெளிவூட்டும் கருத்தமர்வு தொடரில் நேற்று (23) மாலை பொரல்லை மேகசின் வீதி விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் […]

ஏயர் கனடா விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்!

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏயர் கனடா ஜாஸ் (Air Canada Jazz) விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலையம், திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் குறித்த விமானத்தின் விமானி (Captain) மற்றும் உதவி விமானி (First Officer) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மொன்றியலில் இருந்து வந்த இந்த விமானம், விமான நிலைய தீயணைப்பு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் அதன் காக்பிட் (Cockpit – விமானி அறை) முழுமையாக சிதைந்து போனது. இதில் […]

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு!

இலங்கைக்கு இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை 480 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கவும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவாக விடுவிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒப்புக்கொண்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா (Masato Kanda) தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பபட்டன. […]

போர்க்கப்பல் குறித்த ஈரானிய தூதுவரின் கருத்துக்கு அமைச்சரவைப் பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு?

இலங்கை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் ஈரானின் போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்த கருத்துக்கு, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ செவ்வாய்க்கிழமை பதிலளிக்க மறுத்துவிட்டார். ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், தூதுவரின் கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜயதிஸ்ஸ பதிலளித்தார். “நாம் ஒரு நடுநிலையான நாடாகத் தொடர்ந்து செயல்படுவோம். எமது நடுநிலைமையைப் பாதுகாப்பதற்காக எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அவரது […]

இன்று இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பிய நாள்; ராஜீவ்காந்தியின் இராஜதந்திர அணுகுமுறை குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய அரசாங்கத்தின் இராஜதந்திர அணுகுமுறையை, இலங்கையுடனான வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார். முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா, ராஜீவ் காந்திக்கு மிகவும் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அந்த கடிதத்தில், பொருத்தமற்ற கொள்கைகள் பின்பற்றப்படுவதாகவும், இந்திய வீரர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்றும், அமைதி பேணப்படுவதற்குப் பதிலாக மோதல்கள் தீவிரமடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக அவர் […]

மனைவியை பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்துவதாகவும், அவரைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கெனவே, சிறையில் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இம்ரான் கான், தற்போது மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி முதல் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈத் – ரமழான் பண்டிகையையொட்டி சிறையில் இருந்து […]

‘லவ் 3.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுடைய பெரும்பாலான தருணங்களை பிரபல தனியார் செயலியான இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் செலவழித்து வருகிறார்கள். இதில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடிக்கும் ‘லவ் 3.0’ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜேஷ் வி.கே. இயக்கத்தில் உருவாகும் ‘லவ் 3.0’ படத்தில் அரனிகா ( ரீல்ஸ் அக்கா), கோயமுத்தூர் மாப்ள மற்றும் கார்த்திகேயன் (கே என் ஸ்மைலி ) ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். […]